முதல்வர் கருணாநிதி வருகிற 28ம் தேதி டெல்லி செல்கிறார். மே 28ம் தேதி நடைபெறும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார். அவருடன் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் செல்கிறார்கள்.இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சந்திக்கிறார் கருணாநிதி. சோனியாவுடனான சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கிறார். பிரதமரை சந்தித்து தென்னிந்திய நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்ககவுள்ளார். 2 நாட்கள் கருணாநிதி டெல்லியில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறன் குடும்பத்தைச் சேர்ந்த யாருடைய துணையும் இன்றி முதல்வர் கருணாநிதி டெல்லி பயணம் மேற்கொள்ளவிருப்பது அவரது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
source : Thatstamil
Wednesday, May 23, 2007
முதல்வர் கருணாநிதி 2ஆம் தேதி டெல்லி பயணம்!
Labels:
அரசியல்
Posted by
Adirai Media
at
4:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment