"நெப்ராஸ்காவில் ஹென்றி டூர்லி மிருககாட்சிசாலைன்னு ஒண்ணு இருக்கு"
"சரி, அதுக்கென்ன?"
"ஒரு உயிரினம் குட்டி போட்டிருக்கு!"
"சரி, அதுக்கென்ன?"
"அதுக்கென்னவா, ஆண் சேர்க்கை கொள்ளாமலே குட்டிப்போட்டிருக்காம்!"
"சில நிலை உயிரினங்களில் அப்படியும் உண்டு தான், உதாரணமா மண்புழு"
"அய்யோ, மண்புழு இரு பால் உயிரி - நான் சொல்றது சுறா மீன்!"
"என்னது, சுறா மீனா?"
"ஆமா, சுறா மீன்களை அழிவிலிருந்து காப்பாத்த புதுவழின்னு ஆராய்ச்சியாளர்கள் குதூகலிக்கறாங்களாம்!"
"நம்ப முடியல, உண்மையா இருக்குமா?"
"தினமலர்ல தான் போட்டிருக்காங்க, இப்படிப் பிறக்கிற குட்டிகள் தாயின் மரபணுக்களை ஒத்திருப்பதுமில்லையாம்"
"ஆச்சர்யந்தான், 'சற்றுமுன்'ல போட்டுட்டியா?"
"இதோ!"
Wednesday, May 23, 2007
ஆண் சேர்க்கையில்லாமல் இனவிருத்தி!
Posted by வாசகன் at 10:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
nice & palatable way to present the news! thanks
என்னங்க இது....ஆண் சேர்க்கையில்லாமல் இனவிருத்தி சரி...பெண் சேர்க்கையில்லாமல் இனவிருத்தி கெடையாதா? அப்ப ஆம்பிளைங்க வீண்தானா?
ஐயா லிங்கு குடுதா காலத்துக்கு அழியாத மாதிரி குடுங்க தேடுற மாதிரி வைக்காதீங்க
பத்து நாள் கழித்து கிளிகினாலும் சரியான பக்கத்துக்கு போவனும்
பாத்து செய்யுங்கப்பு
பாபா, நன்றி!
ஜீஇரா, ஆண் தேவைப்படாமலிருக்கலாம்! - அவனுடைய உயிரணு?!
மின்னல், நல்ல அறிவுரை! ஆனால் தினமலர் இணைப்பில் தான் இந்த சிரமம் இருக்கிறது என்று நினைக்கிறோம்.
எதற்கும் முயற்சித்துப் பார்க்கிறோம்.
Post a Comment