.

Thursday, May 17, 2007

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

பாலத்தீனத்தின் காசா நகர ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியதில், குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு நடைபெற்ற ஒரு தாக்குதலில், ஹமாஸின் பாதுகாப்பு தலைமையகம் அழிக்கப்பட்டது, மற்றொன்று ஹமாஸ் உறுப்பினர்கள் பயணம் செய்த காரின் மீது மேற்கொண்டது.

இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஹமாஸின் இராணுவப் பிரிவு எச்சரித்துள்ளது.

பாலத்தீனக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவினரிடையே தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெறும் மோதல்களில் காசாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த மோதல்கள் காரணமாக இதுவரை குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

BBC NEWS | Middle East | Israel launches Gaza air strikes (BBC Tamil)

1 comment:

Boston Bala said...

காசாவில் ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிற்கு இடையில் உடன்பாடு


காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் ஃபத்தா ஆகிய பாலத்தீனக் குழுக்களின் ஆதரவாளர்களுக்கிடையே அதிகரித்துவரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அந்த இரு குழுக்களுக்கிடையே புதிய மோதல் நிறுத்தம் ஒன்று குறித்து உடன்பாடு காணப்பட்டுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமது துப்பாக்கிதாரிகளை தெருக்களில் இருந்து விலகச் செய்யவும், சண்டையில் பணயமாகப் பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் இரு தரப்பும் உடன்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில், இது போன்ற 4 உடன்பாடுகள் எட்டப்பட்டும் அவை வன்செயல்களுக்கு முடிவு காணத் தவறிவிட்டன.

இஸ்ரேல் காசா பகுதியில் தனது தாக்குதலைத் தொடருகிறது.

பாலத்தீனக் தீவிரவாதிகள் இஸ்ரேலினுள் ராக்கட்டுகளைச் செலுத்த தயாரிக்கொண்டிருந்த ஒரு தளம் என்று தான் கூறும் இடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
(BBC Tamil)

-o❢o-

b r e a k i n g   n e w s...