.

Monday, May 28, 2007

கலைஞர் டிவிக்கு "சிவாஜி' பட உரிமை

புதிதாக தொடங்கப்பட உள்ள 'கலைஞர் டிவி'க்கு, ரஜினி நடித்து வெளிவர உள்ள 'சிவாஜி' படத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள்:'சிவாஜி' படத்தை தமிழகம் முழுவதும் திரையிட வசதியாக 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜூன் 3-ம் தேதி 'கலைஞர் டிவி'க்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி "டிவி' தொடங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

'டிவி' தொடக்க நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி, 'சிவாஜி' படம் "கலைஞர் டிவி'யில் ஒளிபரப்பாகும்.

தினமணி

4 comments:

சிவபாலன் said...

அப்படி போடு அருவாளே..

என்னமோ ஒன்னும் புரியவில்லை

Boston Bala said...

இவர்கள் பாடினால் :)

'கண்ணாளனே, எனது கண்ணை நேற்றோடு காணவில்லை!' - மாறன் ப்ரதர்ஸ்

'எங்கிருந்தாலும் வாழ்க' - சூப்பர் ஸ்டார்

'அங்குமிங்கும் பாதையுன்டு... இன்று நீ எந்தப் பக்கம்?' - 'தசாவதாரம்' கமல்

'நான் ஒரு ராசியில்லா ராஜா;
என் வாசலுக்கில்லை இதுவரை' - ஜெயா டிவி

'சரக்கு வச்சிருக்கேன்' - இயக்குநர் ஷங்கர்

'ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்' - ஏவியெம்

சிவபாலன் said...

//கண்ணாளனே, எனது கண்ணை நேற்றோடு காணவில்லை!' - மாறன் ப்ரதர்ஸ் //

:)

Boston Bala said...

'சிவாஜி' பட விவகாரம்: ஏவி.எம். சரவணன் விளக்கம்

சென்னை, மே 29: ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் ஜூன் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள "சிவாஜி' படம், கலைஞர் டி.வி.யில் ஆகஸ்ட் 15-ம் தேதி ஒளிபரப்பாகாது என ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

"சிவாஜி' படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டி.வி.க்கு கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் கலைஞர் டி.வி.யின் ஒளிபரப்பு தொடங்கும் நாளான ஆக.15-ம் தேதி "சிவாஜி' படம் -அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது சாத்தியமற்ற ஒன்று.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வகுத்துள்ள விதிகளின்படி, விநியோகஸ்தர்கள் மூலம் வெளியிடப்படும் புதிய படத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே சேனல்களில் ஒளிபரப்பு செய்ய முடியும். "சிவாஜி' படமும் விநியோகஸ்தர்கள் மூலமாகத்தான் ரிலீஸ் செய்யப்படுகிறது.

அதன்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் "சிவாஜி' படம் சேனல்களில் ஒளிபரப்பாகும் என்று ஏவி.எம். சரவணன் தெரிவித்தார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...