.

Tuesday, May 15, 2007

சற்றுமுன்:- தயாநிதியின் இடத்தை பிடிக்கிறார் அமைச்சர் ராசா: ராதிகா செல்வி, குப்புசாமி, குமரன்-ஒருவருக்கு பதவி

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிய திமுக தலைவர் கருணாநிதி, அந்தத் துறையை மத்திய சுற்றுச்சூழல்துறை அைமச்சர் ராசாவிற்கு வழங்க பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரச்சாமி, அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிக் கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடமும் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி அளித்த கடிதங்களை பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கொடுத்தேன். அக்கடித்தத்தில் என்ன எழுதியிருந்தது என எனக்கு தெரியாது. அதை படித்த பிரதமர் இதில் குறிப்பிட்டுள்ளபடி நிறைவேற்றுவதாக கூறினார்.

மாறன் வகித்த துறை யாருக்கு வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில், அமைச்சர்கள் பற்றி கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள். இதில் காங்கிரஸ் தலையிடாது என்றார்.

இந் நிலையில் தயாநிதி மாறன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜாவிற்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

ராஜா வகித்து வரும் வனத்துறையின் கேபினட் பதவி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கத்திடம் தரப்படலாம் எனவும் தெரிகிறது.

இதன் மூலம் இணைமைச்சராக உள்ள பழனி மாணிக்கம் கேபினட் மந்திரியாக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழனி மாணிக்கம் வசம் உள்ள நிதித்துறை இணையமைச்சர் பதவி மூத்த எம்பியான குப்புசாமி அல்லது ராதிகா செல்வி, குமரன் ஆகியோரில் ஒருவருக்குத் தரப்படலாம் என்று தெரிகிறது.

இந்த குமரனிடம் இருந்து தான் தினகரன் பத்திரிக்கையை தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் ரூ. 130 கோடிக்கு வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையை மாறன் குடும்பத்திடம் விற்பதை தனது மாமனாரான தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனிடம் கூட குமரன் தெரிவிக்கவில்லை என அப்போது செய்திகள் வந்தது நினைவுகூறத்தக்கது.

இதனால் மாறன் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தார் ஆதித்தன். இப்போது தயாநிதி பதவி காலியாகி அதன் மூலம் குமரனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குமரன் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றவர் ஆவார்.

அமைச்சர் பதவிக்கு பெயர் அடிபடும் இன்னொரு திமுக எம்பியான ராதிகா செல்வி, ஜெயலலிதா அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியாவார்.

மத்திய அமைச்சரவையில் நாடார்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திமுக மீது அந்த சமூகத்தினர் குமுறல் வெளியிட்டு வந்தனர். குமரனுக்கோ அல்லது ராதிகா செல்விக்கோ அந்தப் பதவி தரப்பட்டால் அச் சமூகத்தினரின் மன வருத்தத்தையும் போக்க முடியும் என திமுக கருதுகிறது.

நன்றி:-தட்ஸ் தமிழ்

6 comments:

மணியன் said...

மற்றுமொரு செய்தி இணைப்பு

Anonymous said...

//இன்னொரு திமுக எம்பியான ராதிகா செல்வி, ஜெயலலிதா அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியாவார்.//

போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இருக்க வேண்டும்.

கவிதா | Kavitha said...

//இன்னொரு திமுக எம்பியான ராதிகா செல்வி, ஜெயலலிதா அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியாவார்.//

போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இருக்க வேண்டும்.//

இன்னொரு திமுக எம்பியான ராதிகா செல்வி, ஜெயலலிதா ஆட்சியின் போது போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியாவார்.

இப்ப சரியா..?!!

✪சிந்தாநதி said...

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிய திமுக தலைவர் கருணாநிதி, அந்தத் துறையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராசாவிற்கு வழங்க பரிந்துரைத்தார். இதையடுத்து இன்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ராஜா நியமிக்கப்பட்டார்.



இதுவரை ராஜாவிடம் இருந்த வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இனி பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தத் துறையின் இணையமைச்சர் பதவி உள்துறை இணையமைச்சர் ரகுபதியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவுகளை இன்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

Anonymous said...

//மத்திய அமைச்சரவையில் நாடார்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திமுக மீது அந்த சமூகத்தினர் குமுறல் வெளியிட்டு வந்தனர். குமரனுக்கோ அல்லது ராதிகா செல்விக்கோ அந்தப் பதவி தரப்பட்டால் அச் சமூகத்தினரின் மன வருத்தத்தையும் போக்க முடியும் என திமுக கருதுகிறது//

ஆக அமைச்சராகறதுக்கு தகுதி,அனுபவம் எல்லாம் தேவையில்ல, எந்த ஜாதிங்கறது தான் முக்கியம்.

ராதிகா செல்வி - இந்தியாவின் நிதித்துறை இணையமைச்சர் ! ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்க இந்தியா, வெல்க ஜனநாயகம்.

Anonymous said...

ஜாதிவாரியாக கருணாநிதி யாருக்காவது பதவி கொடுத்தாலும் அதுக்கும் பார்ப்புகளின் வருணாச்சிரம அடக்குமுறை தான் காரணம் என்ற சிம்பிள் லாஜிக் கூட தெரியாதவர் ஒருத்தர் இங்கே இருக்காரே.

-o❢o-

b r e a k i n g   n e w s...