.

Tuesday, May 15, 2007

ச: தமிழ்நாடு பிராமணர் சங்கம் வேண்டுகோள்

சென்னை, மே 15:

ராமர் பாலம் விஷயத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கும்பகோணத்தில் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக அரசின் கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கலைக்கல்லூரிகளில் 2வது ஷிப்டு முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தலித் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டுமானால் உத்தர பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் தலித் சகோதரர் அல்லது சகோதரி முதல்வராக வர வேண்டும் என்றும் இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- மாலைச் சுடர்

9 comments:

Thamizhan said...

பார்ப்பனர்கள் மிகவும் நல்லவர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
தாழ்த்தப் பட்டவர்கள் மீது எவ்வளவு அக்கறை பாருங்களேன்.
ஆமாம் முக்கியமானதை விட்டு விட்டீர்களாமே!அவர்கள்
1.இந்துக்களில் தமிழ்நாட்டில் பெரும் போலோர் தமிழ் பேசுவதால் கோவில்களில் ,முக்கியமாகச் சிதம்பரத்தில்,தமிழில்தான் வழிபாடு என்றும்
2.வரதட்சனை எதுவும் வாங்காமல் தங்கள் விருப்பத்தின் பேரிலே மணமுடித்து தாழ்த்தப் பட்டவர்களுடன் வாழும் தங்கள் பெண்களை இனி ஒதுக்கி வைக்காமல் சமமாக நடத்தி ,மருமான்களுக்கு மரியாதை கொடுத்து வாழ்ப் போகிறோம் என்றும்
3.அனைத்து மனிதர்களும் சம்மானவர்கள் அதிலும் பெண்கள் சரி நிகர் சமானம் என்பதை ஒத்துக்கொண்டு அனைவர்க்கும் முன் மாதிரியாக எந்த விதச் சாதி,வர்ண் பேதமின்றி எங்கள் சொந்த வாழ்க்கையிலே வாழ்ந்து முன் மாதிரியாக இருக்கப்போகிறோம்
என்றும் தீர்மானங்கள் போட்டிருக்கிறார்களாமே,
உண்மையா?

Anonymous said...

// உத்தர பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் தலித் சகோதரர் அல்லது சகோதரி முதல்வராக வர வேண்டும் என்றும் இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
//
மாயாவதி உத்திரபிரதேசத்தில் பார்பனர்களுக்கு அதிக சீட்டு கொடுத்தாங்களாம். அது போல் இங்கும் நடந்து நம்ம கை ஓங்காதா என்ற நப்பாசை தான்.

Anonymous said...

தமிழனே,

அருமையாய் சொன்னாய். உன்னுடைய ஒவ்வொரு சாட்டையடியோடு கீழேயுள்ள நெருப்பு வரிகளையும் இணைத்து தன்மானம் காப்பாய் தளபதியே !

1. இந்துக்கள் மட்டுமல்லாமல் தமிழக முஸ்லீம்களும், தமிழ் கிருத்துவரும் தமிழிலேயே பேசவும் எழுதவும் செய்வதால், மசூதிகளில் அரபிக்குப் பதிலாகவும், சர்ச்சுகளில் லத்தீனுக்குப் பதிலாகவும் தமிழிலேயே வழிபாடு நடத்தவேண்டும் என்றும்

2. பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் பிள்ளைமார், வன்னியர், தேவர், மறவர், செட்டியார், நாயுடு, நாயக்கர் உள்ளீடான அனைத்து சமூகங்களும் வரதட்சனை எதுவும் வாங்காமல் தங்கள் விருப்பத்தின் பேரிலே மணமுடித்து தாழ்த்தப் பட்டவர்களுடன் வாழும் தங்கள் பெண்களை இனி ஒதுக்கி வைக்காமல் சமமாக நடத்தி ,மருமான்களுக்கு மட்டுமல்ல மருமகள்களுக்கும் மரியாதை கொடுத்து வாழப் போகிறோம் என்றும்

3. பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் பிள்ளைமார், வன்னியர், தேவர், மறவர், செட்டியார், நாயுடு, நாயக்கர் உள்ளீடான அனைத்து சமூகங்களும் அனைத்து மனிதர்களும் சம்மானவர்கள் அதிலும் பெண்கள் சரி நிகர் சமானம் என்பதை ஒத்துக்கொண்டு அனைவர்க்கும் முன் மாதிரியாக எந்த விதச் சாதி,வர்ண் பேதமின்றி எங்கள் சொந்த வாழ்க்கையிலே வாழ்ந்து முன் மாதிரியாக இருக்கப்போகிறோம்
என்றும்

4. ப்ளாக்குகளில் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுகிற திராவிட குஞ்சுகள் எல்லாம் அதை நிறுவும் வகையில் அவரவர் சாதிக்கான சங்கத்தை சொல்லிலும், செயலிலும் எதிர்க்கப்போகிறோம் என்றும் தீர்மானங்கள் போட்டிருக்கிறார்களாமே,
உண்மையா?

தீர்மானங்கள் போட்டிருக்கிறார்களாமே,
உண்மையா?

ulagam sutrum valibi said...

கத்தோலிக்க கிருஸ்துவ எல்லா தேவாலயங்களில்
தமிழில்தான் வழிபடுகிறார்கள் அது மட்டுமல்ல அவர்கள்
எல்லா மாகாணங்களிலும் அந்தந்த மொழியில் தான் வழிபடுகிறார்கள்

Anonymous said...

Thamizhan ....Engayya unnai kanom....

Chinnappan

Anonymous said...

உத்திர பிரதேச பிராமணர்களை முன் மாதிரியாகக் கொண்டு, அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க
வேண்டும், தமிழக பிராமணர்கள்.

விஜயகாந்த், சரத் குமார், பிஜேபி, விடுதலை சிறுத்தைகளின் கூட்டமைப்பை
உருவாக்கினால் குறைந்தபட்சம் சென்னையின் அனைத்து தொகுதிகளையும் தமிழக பிராமணர்களின் கட்சி வென்று எடுக்கலாம்.

திருமாவளவனை முதல் அமைச்சர் ஆக்கி விடலாம்.

அப்போதுதான் ஆதிக்க நியோ பார்ப்பன ஜாதி தேவர் வன்னிய கொட்டம் அடங்கும்.
இப்படிக்கு,
தலித் பார்ப்பான்.
இப்படிக்கு

Thamizhan said...

எல்லா சாதிச் சங்கங்களும் ஒழியவேண்டும்,சாதியும் ஒழிய வேண்டும்.
இந்திய் அரசியல் சட்டத்திலே "தீண்டாமை" என்று இருப்பதை மாற்றி "சாதி" என்று எழுதி,அதற்குரிய தண்டனையை ஒழுங்காகக் கொடுத்தால் சாதி விரைவிலே ஒழிந்துவிடும்.
பின்னர் பல் பிரச்சினைகள் இட ஒதுக்கீடு,தேர்தல் அநியாயங்கள் எல்லாம் ஒழியும்.முடியாது என்று சொல்பவர்கள் தென்னாப்பிரிக்காவைப் படித்தால் போதும்.
இங்கே பார்ப்பனர்கள் தாழ்த்தப் பட்டோருக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது அவர்களை முன்னேற்றவல்ல!
அவர்களயும் மற்றவர்களையும் மோதவிட்டு நரி வேலை செய்யத்தான்!

Anonymous said...

கடைசியில இங்கேயும் 'அது' நுழைஞ்சிடுச்சே என்பது வருத்தமாக உள்ளது...!!!

Anonymous said...

"அது" = நேர்மை

-o❢o-

b r e a k i n g   n e w s...