.

Monday, June 25, 2007

ஆஃப்கானுக்கு விரைகிறது இந்திய அதிரடிப்படை

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டபிறகும் அங்கு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஓயவில்லை.

மறு சீரமைப்பு பணியில் ஈடுபடும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர் களை அவர்கள் கடத்திச் சென்று படுகொலை செய்கிறார்கள்.

அங்கு மறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்தியர்களை பாதுகாக்கவும், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து இந்தியர்களை மீட்கவும் இந்திய அதிரடிப்படை ஆப்கானிஸ்தான் விரைகிறது.

துணை ராணுவ படை யைச்சேர்ந்த இந்த அதிரடி படையில் 134 பேர் இடம் பெறுகிறார்கள். 2 குழுக்களாக இவர்கள் அனுப் பப்படுகிறார்கள். இவர்கள் விசேஷ பயிற்சி பெற்றவர்கள்.

நேற்று ஆப்கானிஸ்தானின் தெற்குபகுதியில் அமெரிக்க கூட்டு படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் நீண்ட நேரம் சண்டை நடந்தது.

இதில் 26-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...