.

Monday, June 25, 2007

அயல்நாட்டு கப்பற்படை கலங்கள் இந்தியாவிற்கு வருவது புதுமை அல்ல: அந்தோணி

முதன்முறையாக அமெரிக்க கப்பற்படைச் சார்ந்த விமானந்தாங்கி படைக்கலம் USS Nimitz சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப் போகிறது. 'முக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் பொருட்டு' இவ்வாறு பயிற்சிகள் நடத்துவது புதிதல்ல என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி கூறினார். 90 போர்விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தாங்கிய இக்கலம் அரபிக்கடலில் ஆறு மாதம் தங்கியிருக்கும். முன்னதாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் உருசிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் தங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
முன்னதாக சிபிஎம் இக்கப்பல் சென்னையில் தங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அணுஆய்தக் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் அனுமதிப்பதில்லை என்ற இந்திய அரசின் கொள்கைக்கு இது புறம்பானது என்று கூறியிருந்தார். அக்கொள்கையிலிருந்து விலகுவதற்கு அரசிற்கு என்ன கட்டாயம் ஏற்பட்டது என்று அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என மேலும் அவர் கூறினார்.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...