சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு இன்று அதிகாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம மனிதன், சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்னும் சில மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான். இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. யாரோ வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு புரளியால் விமான போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Monday, June 25, 2007
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.
Labels:
தீவிரவாதம்,
விமானம்
Posted by
Adirai Media
at
10:10 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment