.

Wednesday, June 20, 2007

சினிமாவில் வசனம் பேசுபவர்கள் அரசியலுக்கு வர முடியாது : திமுக, அதிமுக மீதும் ராமதாஸ் பாய்ச்சல்

திரைப்படங்களில் அரிதாரம் பூசிக்கொண்டு அரசியல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்ததால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. எனவே இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீலகிரி மாவட்ட பாமக சார்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மேலும் பேசியதாவது:

தமிழகத்தின் தற்போதைய நிலை மோசமாகவே உள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்பவர்களே குடி மூலம் குடியை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்துவிட்டு இளைஞர்கள் தற்போது திரையரங்குகளிலும், மதுக்கூடங்களிலும்தான் கூடுகின்றனர்.

அரிதாரத்தைக்கூட கலைக்காமல் இளைஞர்களிடம் வசனம் பேசுபவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது. யாரோ எழுதிக் கொடுக்கும் அரசியல் வசனங்களைப் பேசி பகல் கனவு காண்கின்றனர்.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வரானதும், அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வரானதும் விபத்துக்களே ஆகும். அதைப் போலவே திரைத்துறையோடு தொடர்புள்ள யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். இவர்களெல்லாம் ஸ்டுடியோக்களிலிருந்து நேரடியாக வருகிறார்களே தவிர அரசியல் தெரியாதவர்கள்.

கல்வியும் வியாபாரமாகிவிட்டது. எல்கேஜி நடத்துபவர்கள் சிறு வணிகர்கள் என்றால், மருத்துவக் கல்லூரி நடத்துபவர்கள் பெரும் வணிகர்களாவர். இந்த நிலையை மாற்ற பாமகவைத் தவிர வேறு யாரும் குரல் கூட கொடுக்கவில்லை. பாமக வித்தியாசமான கட்சி. 2020-ல் தமிழகம் எப்படி இருக்க வேண்டுமென இப்போதே திட்டம் தயாரித்துள்ளோம்.

இதை உதகையில் புதன்கிழமை வெளியிடுகிறோம். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதில் முன்னணியில் இருப்பது பாமகதான். தமிழக அரசியல் களத்தில் முன்னிலையில் இருப்பதும் பாமகதான். இதை சவாலாகவே சொல்கிறேன்.

உதகை நகரம் அழகாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டங்கள் ஏதுமில்லை. நல்ல சாலை வசதி கூட இல்லை. இங்குள்ள மக்களுக்கு சமூக, பொருளாதார வளர்ச்சியுமில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதியும் 80 சதவீதம் வரை சுரண்டப்படுகிறது.

எனவே உதகை நகருக்காக ஒரு மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்கி இந்நகரை அழகுபடுத்த வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமில்லை என்றார்.

தினமணி

6 comments:

வடுவூர் குமார் said...

அப்ப திருமா மாதிரி அரசியலில் இருந்துவிட்டு சினிமாவுக்கு போகலாமா?
கூடிய விரைவில் அரசியல் பற்றி யாராவது கல்லூரி ஆரம்பித்தால் நல்லது...ஒருவேளை பாமாகா அதைத்தான் சொல்கிறதோ?

ஒளி said...

வசனம் பேசலாம்னு அப்ப அரசியலில் இருந்து சினிமாவிற்கு போனா நல்லா வசனம் பேசலாம்னுதான சொல்லவர்ராரு.அப்படித்தானே!!

Anonymous said...

2020-ல் தமிழகம் எப்படி இருக்க வேண்டுமென இப்போதே திட்டம் தயாரித்துள்ளோம்.

I know what it is. Anbumani Ramadoss - C.M.
Sowmya Anbumani-
Deputy C.M
G.K.Mani - Education Minsiter
Kavita (Ramadoss's daughter)-
Finance Minisiter
Thangarpachan: Minister for
Culture,Films and Media

Official TV: Makkal TV
Official Newspaper:Tamizhosai

Opposition leader:Kushboo

Anonymous said...

இராமதாசுக்கு இரஜினி பெயரை கேட்டாலே அதிருது போல!

Subramanian said...

அப்பொ விழுப்புரத்திலெ தனியார் மருத்துவப் பல்கலைக் கழகம்(இவங்கது தான்)ஆரம்பிக்கப் போறாங்களாமே?அவங்கல்லாம் எந்த வணிகர்களிலே சேர்த்தி?

Anonymous said...

//சினிமாவில் வசனம் பேசுபவர்கள் அரசியலுக்கு வர முடியாது //

சரீ....இ
சினிமாவில் வசனம் எழுதுபவர்கள்..??

-o❢o-

b r e a k i n g   n e w s...