.

Wednesday, June 20, 2007

Hackerகளை நியமிக்க விரும்புகிறோம்- இலங்கை அரசாங்கம்

இலங்கையில் தமிழ்.நெட் தளம் தடுக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. இப்போது தளத்தை இணைய ஹேக்கர்களை வைத்து முற்றிலும் செயல்படாமல் செய்ய விரும்புகிறோம்' என்று இலங்கை அரசாங்கம் சொல்லி இருக்கிறது.

புலிகளுக்கு ஆதரவான தளமாக அறியப்படும் தமிழ்நெட் தளத்தை சில நாட்களாக அரசாங்கத்தின் அறிவுரைப்படி தடுத்து வைத்திருப்பதாக இலங்கையின் முக்கிய இணையச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை மந்திரியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் Keheliya Rambukwella 'முடியுமானால், hackerகளைக் கொண்டு தமிழ்நெட் தளத்தை மொத்தமாக செயல்படாமல் செய்வேன்' என்று சொன்னார்.

'இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செய்கை ஊடக சுதந்திரத்தை மொத்தமாக அழிக்கும் முயற்சி' என்று Free Media Movement (FMM) என்னும் தன்னார்வ அமைப்பு விமர்சித்துள்ளது.

50% அரசுடைமை நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகாம் மட்டும் தான் இந்த தளத்தை நிறுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து இயங்கும் வேறு பல இணைய வழங்கிச் சேவைகள் மூலம் தமிழ்.நெட் தளத்தை இலங்கையிலும் பார்க்க முடியும்.

Sri Lanka seeks hackers to down pro-Tiger website - DNA India

2 comments:

Anonymous said...

ஹெகலிய ரம்புக்கல பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பேச வல்ல அமைச்சர் தானே தவிர பாதுகாப்பு அமைச்சர் கிடையாது. ஆனாலும் இது எவ்வளேவோ மேல் பொன்ஸ் தமிழக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளில் இருக்கிற உண்மைத்தன்மைகளோடு ஒப்பிடுகையிலும்அவர்களின் கற்பனை வளத்தோடு ஒப்பிடும் போதும்

பொன்ஸ்~~Poorna said...

அனானி, நன்றி, மாற்றிவிட்டேன்.

இது போன்ற செய்தியே ஒரு இந்திய செய்தித்தளத்தில் வந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது!

-o❢o-

b r e a k i n g   n e w s...