இந்தத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் பெருமாளை சுமார் மூவாயிரத்து ஐந்நூறு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார், அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகம். அவர் இறந்ததையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது.
மதுரையை இரண்டாகப் பிரித்துச் செல்லும் வைகை ஆற்றின் வடபுறமும் தென்புறமும் வியாபித்துள்ள தொகுதி இது. மதுரையின் அடித்தட்டு மக்கள் முதல் உட்சபட்ச பணக்காரர்கள் வரை இந்தத் தொகுதியில் வசிக்கிறார்கள். மதுரை மாநகராட்சியின் இருபது வார்டுகள் கொண்ட இந்தத் தொகுதியின்
வாக்காளர் எண்ணிக்கை 156,180.
இதில் ஆண் வாக்காளர்கள் 77,531
பெண் வாக்காளர்கள் 78,649
"பெரியாறு அணையில் தண்ணி இல்லே. அடுத்த மாசம் மதுரையில் குடிக்கவே தண்ணீர் இருக்காது. தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் கேரளத்திலுள்ள எல்லாக் கட்சிக்காரங்களும் ஒண்ணா இருக்காங்க. இங்கே அரசியல்வாதிகள் அதைப்பற்றியே கவலைப்படாமல் தெருச்சண்டை போட்டுக் கொண்டு இருக்காங்க. காவிரி பற்றி வாயே திறக்காத ரஜினியின் 'சிவாஜி' படத்தைப் பார்க்க மதுரையில் பாதி ஜனம் தியேட்டர் முன்னாடி நிக்குது. நீங்க பெட்டியைத் தூக்கிட்டு 'எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடப் போறீங்க?'ன்னு கேட்டு வந்துட்டீங்களாக்கும்..." என சட்டையைப் பிடித்திழுக்காத குறையாக கோபப்பட்டவர்களும் உண்டு.
வாக்காளர்களிடம் பெற்ற 1990 ஓட்டுகளில் 'தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்' என காரசாரமாக எழுதிப்போட்டிருந்த நான்கு சீட்டுகளை நீக்கிவிட்டு, மீதமிருந்த 1986 ஓட்டுகளையும் பரிசீலித்தோம்.
கருத்துக் கணிப்பின் போது கணிசமான வாக்காளர்கள் விடாப்பிடியாக 'ஓட்டுப்போட ஓர் ஐந்து ரூபாயாவது தாங்க...' என நம்மிடம் கேட்டது வேதனையான விஷயம். அதனால் இந்தத் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் பணத்துக்குப் பெரும் பங்கு இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தொகுதிக்குள் வாக்காளர்களுக்கு முன்னணி அரசியல்கட்சிகள் ரகசியமாக பணப்பட்டுவாடா செய்து கொண்டுதான் இருக்கின்றன.
- ப. திருமலை / குமுதம் ரிப்போர்ட்டர்
Wednesday, June 20, 2007
மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றி யாருக்கு? (குமுதம் கருத்துக்கணிப்பு முடிவுகள்)
Labels:
அரசியல்,
கருத்துக்கணிப்பு,
தமிழ்நாடு,
தேர்தல்
Posted by Boston Bala at 8:18 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
காங்கிரஸ்தான் வெற்றி பெறும். காரணம் அ.தி.மு.க.வின் ஓட்டுக்களை விஜயகாந்த் பிரிக்கிறார். அவ்வளவுதான்..
Post a Comment