போலந்து நாட்டை சேர்ந்தவர் ஜேன் கிரிப்ஸ்சி. ரெயில்வே தொழிலாளி. 19 ஆண்டுகளுக்கு முன் இவர் வேலைக்கு சென்ற போது வேகமாக வந்த ரெயில் இவர் மீது மோதியது.
படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் மயங்கிய நிலையில் (கோமா) கிடந்தார். உடலில் காயங்கள் குணமானாலும், அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவர் 2 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று டாக்டர்களும் கைவிரித்து விட்டனர்.
ஆனால் ஜேன் கிரிப்ஸ்சி மயங்கிய நிலையிலேயே 19 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்தார். அவரது மனைவியும் நம்பிக்கை இழக்காமல் நினைவு திரும்பாத கணவனுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேன் கிரிப்ஸ்சிக்கு இப் போது நினைவு திரும்பி விட்டது. படுக்கையில் இருந்து எழுந் தார். இப்போது அவருக்கு 65 வயது ஆகிறது. புதிய உலகத்தை பார்ப்பது போல் அதிசயமாக அனைவரையும் பார்த்தார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் அவருக்கு இப்போது தான் தெரியும். செல்போன்களை சர்வசாதாரணமாக எல்லோரும் பயன்படுத்துவதையும் அவர் அதிசயமாக பார்க்கிறார். எல்லாமே அவருக்கு மாறிப் போயிருந்தது.
மாலைமலர்
Tuesday, July 3, 2007
19 ஆண்டுகளுக்குப் பின் நினைவு திரும்பியவர்.
Labels:
உலகம்,
மருத்துவம்,
வித்தியாசமானவை
Posted by வாசகன் at 3:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
நினைவு திரும்பியபின் அவர் அலுத்துக்கொண்ட விசயங்களில் சில:
அட கலைஞரும் ஜெயும் நடத்துகின்ற வார்த்தைப் போர் முடிவிற்கே வரவில்லையா?
இலங்கைத் தமிழருக்கு இந்தியா இன்னுமா உதவவில்லை?
சன் தொலைக்காட்சியில மெகா தொடர் முடிவுக்கு வரவில்லையா?
தமிழ்னாட்டுக்காரனுக்கு கர்னாடகக்காரன் இன்னுமா குடிக்க தண்ணி கொடுக்கல?
புள்ளிராஜா
Please see: http://dondu.blogspot.com/2007/06/blog-post_11.html
Post a Comment