.

Tuesday, July 3, 2007

சென்னை வந்தது நிமிட்ஸ்.

கதிர் வீச்சு ஏற்படுமா?
இருநாட்டு கப்பற் படைகளுக்கு இடையே புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கப்பலின் தளபதி டெரன்ஸ் பிளாக் கூறினார். நிமிட்ஸ் கப்பல் நேற்று காலை 6.30க்கு சென்னை துறைமுகம் வந்தது. சென்னையில் இருந்து பத்திரிகையாளர் குழுவினர், நிமிட்ஸ் கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கப்பலின் தளபதி டெரன்ஸ் பிளாக் அளித்த பேட்டி: இந்தியா வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. இது நட்பு ரீதியான பயணம்.இதுவரை இரு நாட்டு கப்பற் படையினரும் நேருக்கு நேர் பேசிக் கொண்டதில்லை. இந்த வாய்ப்பு அதற்கு வழி வகுத்துள்ளது. இரு நாட்டு கப்பற் படைகளுக்கு இடையே புதிய மாற்றங்களுக்கான அறிகுறியாகவும் இந்த பயணத்தை கருதுகிறோம். இந்த கப்பலில் அணு ஆயுதங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதற்கு பதில் சொல்ல முடியாது. 57வருட அணு சக்தி பயன்பாட்டில் எந்தவித விபத்தும் ஏற்பட்டதில்லை. இந்த கப்பலில் அணுக்கழிவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த பயணம் குறித்து பொதுமக்களோ கப்பல் ஊழியர்களோ அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு பிளாக் கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...