ஆந்திர, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக மாணவிகள் சேர்க்கை பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஆந்திர அரசு பள்ளிகள் பலவற்றில் அடிப்படை வசதிகள் மோசமான நிலை இருப்பது தான் என்பது தெரிய வந்துள்ளது.
அது பற்றி கூறப்படும் புள்ளி விவரங்கள் வருமாறு:-
ஆந்திர மாநில அரசு பள்ளிக்கூடங்களில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள். மொத்தம் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் 36 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் கழிவறை வசதி இல்லை. 24 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 5 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் டேபிள், சேர் உபகாரணங்கள் போது மான அளவில் இல்லை. 20 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் போதுமான அளவு வகுப்பறை கூடங்கள் இல்லை.
அரசு பள்ளிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறைக்கு ஒரு உதாரணம். அசிபாபாத் நகரில் உள்ள ஒரு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் 600 மாணவிகள் மொத்தம் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிவறை வசதி மட்டுமே உள்ளது. வகுப்புகளுக்கு இடைவேளை விடும் போது இந்த கழிவறை களுக்கு முன்பு நீண்ட வரிசை யில் மாணவிகள் நிற்பது வேதனையளிக்கிறது.
இதனால் 10 நிமிட இடைவேளை போதாமல் மேலும் நேரத்தை நீட்டிக்க வேண்டியிருக்கிறது என்கின்ற னர் அப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியைகள். நிறைய அரசு பள்ளிக் கூடங்களில் காம்பவுண்ட் சுவர் இல்லை. இதைப்பயன்படுத்தி பள்ளிக்கூட இடத்தில் வீடுகள் கட்டி ஆக்ரமிக்கின்றனர் என்கின்றனர் ஆசிரியர்களும் மாணவர்களும்.
ஐதராபாத் நகரில் உள்ள நிறைய அரசு பள்ளிகளில் கூட கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் இருப்பதாக அதில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மாலைமலர்
Tuesday, July 3, 2007
600 மாணவிகளுக்கு ஒரே கழிவறை
Posted by Boston Bala at 6:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
ஹைதரபாத்தில் கம்ப்யூட்டர் டெவலப்மெண்டை விட்டுவிட்டு முதலில் கழிவறை டெவலப்மெண்டை செய்ய சொல்ல வேண்டும்.
thamizh naadilee..athuvum illaiye appu...
Post a Comment