.

Tuesday, July 3, 2007

சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்' படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

அஜீத்தின் கிரீடம் ரிலீசுக்கு தயாராகிறது. ஆழ்வாருக்கு பின் அவர் நடித்த படம் இது. திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். சுரேஷ் பாலாஜி தயாரித்துள்ளார். இவர் பழம் பெரும் நடிகர் பாலாஜி மகன். விஜய் இயக்கி யுள்ளார். ஜி.பி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தந்தை மகனுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டமே கதை. தந்தை பாத்திரத்தில் ராஜ்கிரன் நடிக்கிறார்.

அஜீத்தை தனக்கு பிடித்த துறையில் பெரிய ஆளாக்க ராஜ்கிரன் விரும்புகிறார். அஜீத்தோ இன்னொரு துறையில் சாதிக்க துடிக்கிறார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அஜீத் குடும்பத்தை விட்டு பிரிகிறார். பிறகு தந்தை வியக்கும் வகையில் உயர்ந்து காட்டுவது கிளைமாக்ஸ்.

கிரீடம் படம் இந்த வாரம் தணிக்கை குழுவுக்கு அனுப்பட உள்ளது. வருகிற 12-ந் தேதி படம் ரிலீசாகும் என தெரிகிறது. அன்றைய தினம் தவறினால் 20-ந் தேதி வெளியாகும்.

இப்படத்துக்கான சென்னை விநியோக உரிமைகளை நாகாரவி வாங்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்யா நடித்த வட்டாரம், லாரன்ஸ் நடித்த முனி படங்களை விநியோகம் செய்தவர். கிரீடத்தை வாங்க பிரமிடு சாய்மீரா மற்றும் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனங்கள் முயற்சித்தன. இறுதியில் நாகாரவி கைக்கு போய் உள்ளது.

இது பற்றி நாகாரவி கூறும் போது, கிரீடம் படத்துக்கான சென்னை வினியோக உரிமையை ரூ.75 லட்சத்துக்கு வாங்கியுள்ளேன். 5 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்துள்ளோம் என்றார். என்.எஸ்.சி. தவிர எல்லா ஏரியாக்களுக்கும் கிரீடம் படம் விற்கப்பட்டு விட்டது. என்.எஸ்.சி.க்கு மட்டும் தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் தொகை வராததால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது.

மாலைமலர்

2 comments:

Anonymous said...

அஜீத் மசாலா பாதையில் இருந்து, நல்ல கதையம்சம் கொண்ட கிரீடம் (மலையாளத்தில் இப்படம் சக்கை போடு போட்ட சிறந்த படம். மோகன் லாலுக்கு தேசிய விருது வாங்கித்தந்தது.) படத்தில் நடிப்பது நல்லதே. வாழ்த்துக்கள்.

தென்றல் said...

அருமையான மலையாளபடம்...

எந்தளவுக்கு மசாலாவாக்க போறாங்கனு தெரியலை.. ம்ம்ம் பார்க்கலாம்..!?

-o❢o-

b r e a k i n g   n e w s...