.

Friday, July 13, 2007

பீகாரில் கல்லறையில் பள்ளிக்கூடம் - இறந்தவர்கள் நிம்மதி இழப்பு

பாட்னா, ஜூலை 13-

பீகார் மாநிலம் கோஹரி என்ற கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. 200-க்கும் அதிகமானவர்கள் படிக்கின்றனர். பள்ளிக் கட்டிடத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்படாததால், இங்குள்ள கல்லறை வளாகத்தில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கள் கனவில் ஆவிகளும் பிசாசுகளும் வந்து பயமுறுத்துவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். ஸ்கூலுக்கு லேட்டாக வந்தால், ரத்த வாந்தி எடுப்பாய் என்று சில ஆவிகள் மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர். பீதியடைந்த மாணவர்கள் பலருக்கு காய்ச்சல் வந்திருப்பது பெற்றோரை கவலை அடையச் செய்திருக்கிறது.

வேறு பள்ளியில் சேர்வதானால், 4 கி.மீ. செல்ல வேண்டும். அது சிரமம். எனவே, கல்லறை வளாகத்தில் இருந்து பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், கல்லறை மீது உட்கார்ந்துதான் எங்கள் பிள்ளைகள் மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். இப்போது மேலும் பலர் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் பயப்படுகின்றனர். இரவில் திடீரென்று விழித்து அழுகின்றனர். எங்களுக்கே பயமாக இருக்கிறது என்றனர்.

மாணவர்கள் போடும் சத்தத்தால், கல்லறையில் இருப்பவர்கள் இறந்த பிறகும் நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர். பள்ளியை மாற்றுவதே எல்லாருக்கும் நல்லது என்று மதத் தலைவர்கள் கூறியுள்ளனர். விரைவில் இடம் மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்

நன்றி: மாலை முரசு

1 comment:

சிவபாலன் said...

பாவம் குழந்தைகள் பள்ளி இல்லாமல் தவிப்பது வேதனை. அதைவிட கொடுமை இந்த மதத்தலைவர்களின் பேச்சு. ச்சே வெறுத்தே விட்டது.

-o❢o-

b r e a k i n g   n e w s...