.

Friday, July 27, 2007

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன?

நடிகர் சரத்குமார் கேள்வி!

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். டாடா நிறுவனம் தொழிற்சாலையின் முதல்கட்டத்தை துவங்க 30 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கணிமவளத்தினை தோண்டி எடுத்து வெளியில் விற்பார்களா? அல்லது 30 மாதங்கள் கழித்து தொழிற்சாலை ஆரம்பித்து டைடானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் வரை கணிம வியாபாரம் செய்யாமல் இருப்பார்களா? அணுசக்தி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கணிமங்களை சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதாகவும், அதனால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் இதுபோன்ற தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்தலாமே என்று அந்த அறிக்கையில் நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

4 comments:

லக்ஷ்மி said...

அதெல்லாஞ்சரி, முதல்ல எனக்கு ஒரு டவுட்டு. அதை யாராச்சு தெரிஞ்சவுங்க தீத்து வைங்க பாக்கலாம். இப்ப சரத் எந்த கட்சில இருக்காரு? அவருக்காச்சும் அது தெரியுமா?

Anonymous said...

சபாஷ் சரியான போட்டி...!!!

Anonymous said...

Prime purpose of a government should be to run(manage) the country and not indulge in running a company.

Suddenly this guy seems to be interested in the happenings around. :))

aadu nanayuthunnu onaai azhuthathaam. :)

anony munna

aathirai said...

அரசே எடுத்தால் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் சாப்பிடுவார்கள்.
டாட்டா எடுத்தால் டாடா சாப்பிடுவார். அண்ணாச்சி எடுத்தால்
எடுக்கிற அண்ணாச்சி சாப்பிடுவார். எப்படி பார்த்தாலும் இந்த ஊர்
மக்களுக்கு பெப்பேதான்.

http://ullal.blogspot.com/2007/07/blog-post_27.html

-o❢o-

b r e a k i n g   n e w s...