துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவாத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பட்டீலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியதால் துணை ஜனாதிபதி பதவியை செகாவத் ராஜி னாமா செய்து விட்டார். இதனால் தற்போது துணை ஜனாதிபதி பதவி காலியாக இருக்கிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆகஸ்டு 10-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதற் கான அனைத்து ஏற்பாடு களும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முகம்மது ஹமீத் அன்சாரி போட்டியிடுகிறார். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தலைவராக இருக் கும் ஹமீத் அன்சாரிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட சில மாநில கட்சிகளின் ஆதரவும் கிடைத் துள்ளது.
பாரதீய ஜனதா தலைமை யிலான கூட்டணி சார்பில் மேல்சபை முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா நிறுத்தப்பட்டுள்ளார். 3-வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் ரசீத் மசூத் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மூவரும் முஸ்லிம்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுப்பார்கள். மக்களவையில் 545 எம்.பி.க்கள், மாநிலங்கள் அவையில் 245 எம்.பி.க்கள் ஆக மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (வெள்ளி) பாராளு மனறத்தில் உள்ள தனி அறையில் நடைபெறும். காலை 10 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கும். ஓட்டுப் பதிவுக்கான ஓட்டுச்சீட்டுகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 790 ஓட்டுக்கள் தான் என்ப தால் ஓரிரு மணி நேரத்துக் குள் துணை ஜனாதிபதியாக தேர்வாகப் போவது யார் என்பது தெரிந்து விடும்.
மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரி மிக, மிக எளிதான வெற்றியை பெறுவார் என்பது ஏற்கனவே முடிவாகி விட்டது. மொத்தம் உள்ள 790 பேரில் 450 எம்.பி.க்களின் ஓட்டுக்கள் அன்சாரிக்கு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
நஜ்மா ஹெப்துல்லாவும், ரஷீத் மசூத்தும் சொற்ப ஓட்டுக்களே பெறுவார்கள். அவர்களது உறுதிப்படுத்தப் பட்ட தோல்வியால் துணை ஜனாதிபதி தேர்தலில் பெரும் பரபரப்பு எதுவும் ஏற்பட வில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டது போல துணை ஜனாதிபதி தேர்தலிலும் சில கட்சி எம்.பி.க்கள் அணி மாறி வாக்களிக்க வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது.
புதிய துணை ஜனாதிபதி யாக ஹமீத் அன்சாரி தேர்வு செய்யப்படுவது மாலை அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும். இதையடுத்து பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் உள்துறை அமைச் சகம் விரைந்து செய்யும். துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி பிரதீபா பட்டீல் புதிய துணை ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப் பார். இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதி மேல்சபை தலைவர் பொறுப்பை ஏற்று, அந்த பணியை செய்யத் தொடங்குவார்.
மாலைமலர்
Vice presidential election on August 10- Hindustan Times
Zee News - BSP to vote for Hamid Ansari in vice presidential poll
Hamid Ansari way ahead in Vice Presidential sweepstakes - India - The Times of India
Friday, August 10, 2007
துணை ஜனாதிபதி தேர்தல்: பாராளுமன்றத்தில் இன்று ஓட்டுப்பதிவு
Posted by Boston Bala at 12:17 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment