.

Friday, August 10, 2007

ஓட்டுப்போடுவது எப்படி?- எம்.பி.க்களுக்கு பாடம் நடத்திய சோனியா

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது எம்.பி.க்கள் பலர் செல்லாத ஓட்டுக்கள் போட்டு விட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் 6 ஓட்டுகளும், பாரதீய ஜனதா கூட்டணியில் 2 ஓட்டுகளும் செல்லாத ஓட்டுகளாகி விட்டன. எம்.பி.க்களுக்கு ஓட்டுப்போடுவது பற்றி முறையான பயிற்சி அளிக்கப்படாததால் காங்கிரஸ்கட்சி 6 ஓட்டுகளை இழக்க நேரிட்டது.

இதனால் இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுகளை தடுக்க காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியே தனது கட்சி எம்.பி.க்களுக்கு பாடம் நடத்தினார்.

இதற்காக அவர் ஒருநாள் முழுவதும் செலவழித்தார். மாநில வாரியாக எம்.பி.க்களை வரவழைத்து ஓட்டுப்போடு வது பற்றி சொல்லி கொடுத்தார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சடிக்கப்பட்டுள்ள ஓட்டுச் சீட்டு போல மாதிரி ஓட்டு சீட்டுகளை சோனியா காந்தி கையில் வைத்திருந்தார்.

அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஹமீத்அன்சாரியின் பெயர் எங்கு இடம்பெற்றுள்ளது. எம்.பி.க்கள் எந்தமுறை யில் எப்படி முத்திரையிட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி சொல்லித் தந்தார். அனைத்து எம்.பி.க்களுக்கும் இது போல் பாடம் நடத்தினார்.

மேலும் வரைபடம் மூலமும் எம்.பி.க்களுக்கு விளக்கினார்.

ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்களுக்கும் பாடம் நடத்த அவர் 5 நிமி டங்கள் முதல் 6 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டார்.

இதுபற்றி மேற்கு வங்கா ளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர்சவுத்திரி கூறு கையில், சோனியாகாந்தி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி ஓட்டுப் போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இதுபோல் பாரதீய ஜனதா எம்.பி.க்களுக்கு சுஷ்மா சுவராஜ் பாடம் நடத்தினார் மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல் எம்.பி.க்களுக்கு ஓட்டுப்போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தார்.

இதுபற்றி சுஷ்மாசுவராஜ் கூறுகையில், நாங்கள் ஒரு ஓட்டை கூட இழக்கவிரும்பவில்லை. இதனால் செல்லாத ஓட்டு விழாத வகையில் ஓட்டுப்போடுவது பற்றி எம்.பி.க்களுக்கு சொல்லி கொடுத்தோம் என்றார்.

மாலைமலர்


V-P polls: Sonia says vote carefully - India - The Times of India

1 comment:

Unknown said...

எல்லாம் நேரந்தான்... வெளினாட்டுக்காரங்க சொன்னாதானே நம்ம மூளைக்கு ஏறும்.

ஆமா, சோனியாவுக்குத் தெரியுமா எப்டி ஓட்டு போட்றதுனு? இத்தாலி ஸ்டைல்ல சொல்லி குடுத்துருக்கப் போறாங்க..

-o❢o-

b r e a k i n g   n e w s...