.

Thursday, August 23, 2007

மீண்டும் வருகிறது அமெரிக்கப் போர் கப்பல் 'நிமிட்ஸ்'

"அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்', அடுத்த மாதம் மீண்டும் இந்தியாவுக்கு வரும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த "நிமிட்ஸ்' கப்பல், உலகின் பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பலில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. அதனால், இக்கப்பல் இந்தியாவுக்கு வருவதற்கு, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், கடந்த மாதம் சென்னை துறைமுகம் அருகே, இந்தக் கப்பல் நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் கிளம்பிச் சென்றது.இந்நிலையில், "தற்போது ஹாங்காங்கில் முகாமிட்டுள்ள நிமிட்ஸ் கப்பல், அடுத்த மாதம் முதல் வாரத்தில், வங்காள விரிகுடா கடலில், இந்திய எல்லைப் பகுதியில் நிறுத்தப்படும். அங்கு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 25 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடும். இந்த பயிற்சி வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். இதன் மூலம், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த அமெரிக்கா உதவும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...