.

Monday, June 4, 2007

ச:தில்லி பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

இராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் சாலை மறிப்பு மற்றும் கடையடைப்பு போராட்டத்தால் தலைநகர் தில்லியின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. இதனிடையே அவர்களின் தலைவர் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் இப்பிரச்சினைக்கு முடிவு காண பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

முழு விவரம்..NDTV.com: Gujjar bandh hits normal life in Delhi

அமெரிக்கா நேக்கட் நியூஸ் (NAKED NEWS)


அழகிகள் நிர்வாணமாக நின்று செய்தி வாசிக்கும் நேக்கட் நியூஸ் சேனலுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. செய்தி வாசித்துக்கொண்டே ஆடைகளை கழற்றியெறியும் வாசிப்பாளரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்ற கனடா நாட்டு அழகி ஹோலி யெகிளின்டன், நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் அரைகுறையாக ஒருவரை பேட்டி காண்கிறார்.


நன்றி: "மாலைச் சுடர்"

ச- பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்.

She is my TEACHER daddy... How can she HURT ME? என்று பெருமிதங்கள் ஒரு பக்கம்.
'இன்றாவது அடி விழாமல் இருக்கவேண்டுமே' என்று நடுக்கங்கள் இன்னொரு பக்கம். (இதில் பக்கம் என்பதை, பிரதேசம், பிற'தேசம்' என்று குழப்பத்தேவையில்லாமல் ஆக்கி விடுகின்றனர் மனிதர்கள்).

இதில் 'சற்று முன்' செய்தி என்னவென்றால், விழுப்புரம் அருகிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி 'சற்று முன்' உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது தான். விண் தொ.கா. செய்தி.

இதே போன்ற ஒரு பழைய செய்தி நினைவுக்கு வருகிறது.

சர்வதேச தொழிலாளர் மாநாடு - சற்றுமுன் நேரடிச் செய்தி!

சிலி நாட்டு அரச அதிபர் மாண்புமிகு. Ms. Michelle Bachelet அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றினார்.

ஜெனிவா நகரில் ஐக்கிய நாட்டு சபை வளாகத்தில் நடந்து வருகிற சர்வதேச தொழிலாளர் மாநாடு பொது அமர்வில் இன்று இந்திய நேரம் மதியம் 02.00 மணிக்கு சிலி நாட்டு தலைவர் வருகை தந்தார். அவரது உரையில் "சம உரிமையுடன் கூடிய வளர்ச்சி, சமூகநீதியுடன் கூடிய முன்னேற்றம்" நமக்கு தேவை என குறிப்பிட்டார்.

மேலும் விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில்.

இன்னும் சில நிமிடங்களில் கானா நாட்டு அதிபர் வருகை தருகிறார்.

=திரு=

ச- கைப்பேசியை 29 ஜூனுக்குப் பிறகு மாற்றுங்கள்!

"இன்னும் இந்த பழைய போனையே வச்சுகிட்டிருக்கீங்களே. எப்ப மாத்தப்போறீங்க?"
"அடுத்த வருசம் ஐ.போன் வந்தவுடனே ஒரேயடியா மாத்திக்கலாம்பா. "
('சாகர அலை'யில் ஒரு டயலாக்)
அதென்ன ஐ-ஃபோன்?
ஐ-போட், கைப்பேசி, இணையம் மூன்றையும் உள்ளடக்கியதும் மின்னணுவியலின் மற்றொரு படியுமான ஐ-ஃபோன் என்கிற புதிய கண்டுபிடிப்பு ஜூன் 29முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இத்தகவலை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சுமார் $500 - $600 விலையுள்ள இந்த ஐ-ஃபோன் 2008ல் 10 மில்லியன் சாதனங்கள் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கைப்பேசிகளின் வருடாந்திர மொத்த விற்பனையில் சுமார் 1 சதவீதமே ஆகும்.

ராய்ட்டர்

ச: அந்தமானில் நிலநடுக்கம்

இன்று காலை 6:52 மணிக்கு அந்தமானில் 5.2 ரிச்டர் அளவு கொண்ட சுமாரான நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர் சேதம் , பொருள்சேதம் பற்றி தகவல் இல்லை.
The Hindu News Update Service

ச: தமிழீழத்தில் பலத்த சண்டை: 82 பேர்வரை மரணம்

சிறீலங்காவின் வடக்கு மாகாணங்களான வவுனியா, மன்னார் பகுதியில் தமிழீழப் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே நேற்று பலத்த சண்டை ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் 30 இராணுவத்தினர் இறந்தனர் என்றும் சிறீலங்கா அரசு 52 புலிகள் இறந்தனர் என்றும் கூறுகின்றனர். இருதரப்பினரும் இறந்தவர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கூறக் கூடுமாதலால் சரியான எண்ணிக்கையை தெளிவுபடுத்த வியலாது.

NDTV.com: Lanka bloodshed claims 82 lives

ச- மனைவியிடமிருந்து விடுதலை கேட்கும் முதியவர்.

71 வயதாகும் தனது மனைவி ராணி தேவி தன்னை உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தி வருவதாகக் கூறி பூபேஷ்வர் குப்தா என்னும் 80 வயது முதியவர் விவாகரத்து கோரியுள்ளார். கான்பூரைச்சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 53 வருடங்கள் ஆகிறதாம். அச்சமயத்தில் ஹிந்து திருமணச்சட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் வங்கியின் முன்னாள் ஊழியரான இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தன் மகள், மருமகன் மீதும் பல குற்றச்சாட்டுகளை இவர் சுமத்தியுள்ளார்.

பி.டி.ஐ

ச: பிரேசில் நாட்டு அதிபர் இந்தியா வருகை

பிரேசில் நாட்டின் அதிபர் லூயி இனாசியொ லூலு டசில்வா நேற்று புதுதில்லி வந்தார். அவர் இன்று இந்திய தலைவர்களூடன் வணிக,பொருளாதார ஒத்துழிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்.

ANTARA News :: Brazilian president in India to push ties

ச:உ பியில் 4000 சிறைக்கைதிகள் விடுதலை

உத்தரபிரதேச சிறைகளில் பல குற்றங்களுக்காக 18,334 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 4000 பேரை விடுவிப்பதாக முதல்வர் மாயாவதி தன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார். பயங்கர வெளிநாட்டு மற்றும் வெளிமாநில குற்றவாளிகள் விடுவிக்கப் படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161 கீழும் குற்றவியல் சட்டம் 432 கீழும் உபி சிறை செயற்புத்தகம் பிரிவு 195,196 மற்றும் 197 கீழும் இவர்களை விடுவிக்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.


About 4000 prisoners to be released from UP jails : Mayawati @ NewKerala.Com News Channel

ச: ஆப்பிரிக்காவின் சியாரா லியானில் ஹெலிகாப்டர் விழுந்து 22 பேர் மரணம்

ஞாயிறன்று சியோரா லியானின் முக்கிய பன்னாட்டு விமானநிலையத்தில் உருசிய MI8 ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் இறந்தனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள்
டோகோ நாட்டு விளையாட்டு அதிகாரிகள் ; ஆப்பிரிக்க தேசங்களிடையேயான கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்துவிட்டு திரும்பும் பயணத்தில் இவ்வாறு நடந்துள்ளது.
மேலுமறிய DNA - World - Helicopter crashes in Sierra Leone, 22 killed - Daily News & Analysis

ச- இராஜஸ்தான் கிளர்ச்சி: டெல்லி சாலைகள் அடைப்பு

இராஜஸ்தானில் குர்ஜார் இனமக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து டெல்லிக்குச் செல்லும் சாலைகள் அடைபட்டிருப்பதாக சிறப்பு செய்தியாளர் (பி.டி.ஐ) தெரிவிக்கிறார்.

'எல்லா சாலைகளும் டெல்லிக்கு செல்லும்' என்று தற்போதைக்கு சொல்ல இயலாது!

ச- பாப் உல்மர் மரணம்: பதவியிழக்கும் அதிகாரிகள்!

பாப் உல்மர் மரணம் இயற்கையானது என்று முடிவு காணப்பட்டதை 'சற்றுமுன்' செய்தி அளித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது, இதைத் தொடர்ந்து இரண்டு பதவியிழப்புகள் பற்றி பிடிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இம்மரணத்தை கொலை என்று அறிவித்த; பிரேதப் பரிசோதனை செய்த இந்திய வம்சாவழி மருத்துவர் சேஷைய்யா, ஜமைக்காவின் துணை காவல் ஆணையர் மார்க் ஷீல்ட்ஸ் ஆகியோரே அவர்கள்.


பதவியிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் ஷீல்ட்ஸ் தாமாக முன்வந்து பதவி விலகக்கூடும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பயணிகளை மறுக்கும் டாக்ஸி டிரைவர்கள்!

(மின்னசோட்டா), ஜூன் 3: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், குடித்திருப்பவர்களை வாடகைக் காரில் ஏற்றிச் செல்ல சில முஸ்லிம் டிரைவர்கள் மறுப்புத் தெரிவித்து முரண்டுபிடிக்கின்றனர்.

இதனால் அவர்கள் விமான நிலைய அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், மின்னபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வாடகைக் கார் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்களில் பலர் சோமாலியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

இவர்கள் குடித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்களை காரில் ஏற்றிச் செல்ல மறுத்து வருகின்றனர். இந்த வகையில் 2002-ம் ஆண்டில் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்ல அவர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இதையடுத்து இப்பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல, நகருக்குள்ளும் யாராவது மது வகைகளை வாங்கிச் சென்றால் அவர்களையும் ஏற்றிச் செல்ல இந்த டிரைவர்கள் மறுக்கின்றனர்.

பலர் இத்தகைய சூழ்நிலையில் வேறு வாடகைக் காரில் ஏறிச் சென்று விடுகின்றனர். ஆனால் காரில் வாடிக்கையாளர்கள் ஏறிய பிறகு, அவர்கள் மது வாங்கிச் செல்வது தெரிந்தால் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர், இந்த டிரைவர்கள்.

சோமாலிய நாட்டில் இருந்து குடிபெயர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மின்னசோட்டாவில் வசித்து வருகின்றனர். இதனால் இதுபோன்ற கலாசார வேறுபாடுகள் அங்கு தலைதூக்குகின்றன. இங்கு சில கடைகளில், காசாளர்கள் உள்ள சில முஸ்லிம்கள் பில் போடும்போது பன்றிக் கறியை தொடமறுப்பதும் நடக்கிறது.

தினமணி

தி.மு.க.,வை அழித்தே தீருவேன்: ஜெ சபதம் - வீடியோ

தி.மு.க.,வை என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன். இந்த வீர சபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே? நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்? தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா? ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது. அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.

மேலும் செய்திக்கு "தினமலர்"

-o❢o-

b r e a k i n g   n e w s...