.

Monday, March 26, 2007

சற்றுமுன்: சச்சின் மாதிரி உள்ளவரா விடாதே பிடி, அடி

சச்சின், ஷேவாக், டோனி போன்ற கிரிக்கெட் வீரர்கள் போன்று முகத்தோற்றம் உடையவர்கள் ஓடி ஒளிய வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கிரிக்கெட் வீரர்களை போன்ற உருவம் உடையவர்கள் அவ்வப்போது தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் விழாக்களில் தோன்றி ரசிகர்களின் கரகோஷத்தை பெற்று வந்தனர்.

ஆனால் இன்று அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள தாகவும், பொதுமக்களுக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தை சேர்ந்தவர் யோகேந்திர ஷா, இவர் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக்கை போன்ற முகத்தோற்றம் உடையவர். இதனால் "ஜி' டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். இந்திய அணி இலங் கையிடம் தோல்வி யுற்றதால் இவரது தெருவில் வசிப்பவர்கள் இவரை ஷேவாக் என்று நினைத்து அடிக்க வருவதாக கூறுகிறார்.

அதேபோன்று ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் ரத்தோர் பார்ப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் போல தோற்றமளிப்பார். முகேஷ் பட்டேல் என்பவர் விக்கெட் கீப்பர் டோனியை போன்று பார்ப்பதற்கு இருப்பார்.

இவர்கள் இருவரையும் பகுதிவாழ் மக்கள் தற்போது வெறுப்புடன் பார்ப்பதாகவும், வசைபாடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஏச்சுக்கு பயந்து இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல முடிவெடுத் துள்ளனர். இந்திய அணியின் தோல்வி யார் யாரை எல்லாம் எப்படி எப்படியெல்லாம் பாதிக்கிறது.

- மாலைச் சுடர்

6 comments:

Radha Sriram said...

இத படிச்சு சிரிக்கரதா அழராதா ஓண்ணும் புரியலே.....brain freeze ஆயிட்டமா??! கடவுளே!!

மணிகண்டன் said...

இது ரொம்ப கேவலமான மனப்பான்மை. அவங்க என்ன பண்ணுவாங்க? எப்பதான் நம்ம மக்கள் திருந்துவாங்களோ?

சிவபாலன் said...

மணிகண்டன்

ஆமாங்க.. நம்ம மக்களை என்ன சொல்லறது என்று தெரியவில்லை..

கருப்பு said...

நம் நிலைமை இப்படி சிரிப்புக்கு உள்ளாகி விட்டதே!

Anonymous said...

நல்ல வேடிக்கையாக உள்ளது

Anonymous said...

கிரிகெட் ஒரு விளையாட்டு என்று எப்பொது நம் மக்கள் புரிந்து கொள்ள போகிறார்கலொ..

-o❢o-

b r e a k i n g   n e w s...