.

Wednesday, March 28, 2007

அண்ணாமலை பல்கலை. பி.இ. மாணவி தற்கொலை: மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம், மார்ச் 28: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விடுதியில் தங்கி பயின்ற பி.இ. மாணவி சாட்னா (20) திங்கள்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து செவ்வாய்க்கிழமை பொறியியல் புலத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமான விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்துத் துறை மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலை வளாகத்தில் பூமாகோயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனுவில் தற்கொலைக்கு காரணமாக இருந்த விரிவுரையாளர் மணிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செனட் மற்றும் சிண்டிகேட் மன்றத்தில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், ஆசிரியர்கள் - மாணவர்கள் பாலியல் நல்லுறவுக் குழு அமைக்க வேண்டும், மாணவி சாட்னா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

8 comments:

ஆதி said...

Boston Bala சார்,

நான் உங்களை வியர்டுக்கு அழைத்து இருக்கிறேன்.

http://adhiseshan.blogspot.com/2007/03/blog-post_28.html

Boston Bala said...

மாணவர்கள் ரகளை எதிரொலி : அண்ணாமலை பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது

சிதம்பரம், மார்ச். 29- பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவருடைய மகள் சேட்னா(வயது 20). இவர் சிதம்பரம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.

சம்பவத்தன்று சேட்னா செய்முறை தேர்வு எழுதினார். தேர்வில் பிட் வைத்து எழுதியதாக தெரிகிறது. இதை கண்காணிப்பு அதிகாரியாக இருந்த கல்லூரி விரிவுரையாளர் கையும் களவுமாக பிடித்தார். இதனால் மனமுடைந்த சேட்னா கல்லூரி விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Headline News - Maalai Malar

Boston Bala said...

Adhiseshan.. இங்கே பாருங்க:

Snap Judgement: Creepy & bizarre behavioral analysis

சிவபாலன் said...
This comment has been removed by the author.
சிவபாலன் said...

சற்றுமுன் கிடைத்த தகவல்...

அண்ணாமலை பல்கலைக் கழகம் பற்றி தகவல்: இறந்த சேத்னாவின் உடல் சிதம்பரத்திலேயே அடக்கம் செய்யப் பட்டது. தற்கொலை செய்து கொண்ட சேத்னாவின் தந்தை பல்கலையின் முன்னாள் மாணவர். வடநாட்டவரான அவர் மகள் தமிழ் கற்கவேண்டும் என்றே இங்கு சேர்த்திருக்கிறார்.காப்பியடித்தது காரணம் என்று சொல்லப் பட்டாலும்,ஆசிரியாரின் தவறான செயல்[பலாத்காரம் ] காரணம் என் கின்றனர்.நேற்று இரவு கொதிப்படைந்த மாணவர் கூட்டம் பல்காலையீன் பல துறைகளிலும் கண்ணாடியை அடித்து கணீனிகளை நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.இதனால் சுமார் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேத்மடைந்துள்ளன.இன்று நடந்த துணைவேந்தர்,சின்டிகேட் உறுப்பினர் கூட்டத்தில் அப்பெண்ணின் பெற்றோர் கலந்து கொண்டு முறையிட்டனர்.சம்பந்தப் பாட்ட ஆசிரியர் மாணவகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப் பட்டது.ப.கழகம் கால வரையறை இன்றி மூடப் பட்டது.

Boston Bala said...

முகமூடி: அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?

Boston Bala said...

பிஇ மாணவி தற்கொலை சம்பவம்: 2 விரிவுரையாளர்கள் சஸ்பெண்ட்


சிதம்பரம், ஏப். 3: அண்ணாமலைப் பல்கலை. பிஇ மாணவி சேட்னா (20) தற்கொலை தொடர்பாக விரிவுரையாளர்கள் மணிக்குமார், ரகுராமன் ஆகிய இருவரை பல்கலைக் கழக நிர்வாகம் திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Boston Bala said...

9-ம் தேதி அண்ணாமலை பல்கலை. வகுப்புகள் மீண்டும் தொடக்கம்

சிதம்பரம், ஏப். 3: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மீண்டும் வகுப்புகள் திறக்கப்படும் தேதிகள் குறித்து துணைவேந்தர் எல்.பி.வெங்கட்ரங்கன் அறிவித்துள்ளார்.

* மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் புலம் ஏப்ரல் 9.
* அறிவியல் புலம் ஏப்ரல் 12.
* கலை, இந்திய மொழியியல், கல்வியியல், இசை மற்றும் விவசாயம் ஏப்ரல் 16.
* பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஏப்ரல் 19-ம் தேதி.

-o❢o-

b r e a k i n g   n e w s...