இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எனினும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணி வெளியேறியவுடன் போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய அணி வீரர்களிடம் கும்ளே இதனை தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 36 வயதாகும் கும்ளே உலகக்கோப்பைக்கு முன்பே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ளே 337 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: MSN Tamil
Wednesday, March 28, 2007
சற்றுமுன்: ஒருநாள் போட்டிகளில் இருந்து கும்ளே ஓய்வு
Labels:
விளையாட்டு
Posted by சிறில் அலெக்ஸ் at 7:50 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
கும்ப்ளேவுக்கு நன்றி.. நன்றி ..
இன்னும் 66 போட்டிகளில் விளையாடியிருந்தால் 337 போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற அபூர்வமான ரிக்கார்டை வைத்திருக்கலாம் . ;)
Post a Comment