.

Friday, March 30, 2007

சற்றுமுன்: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் US $ 142.7 பில்லியன

கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 6.2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 142.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்த கணக்கின்படி 135.5 பில்லியன் டாலர் (ரூ.6,27,112 கோடி) ஆக இருந்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ல் முடிவடைந்த கணக்கின்படி 142.7 பில்லியன் டாலர் (ரூ.6,32,051) ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

"Yahoo-Tamil"

8 comments:

Anonymous said...

எப்படியோ நம்ம பேரனுக்கு பேரன் காலத்திலாவது கடன் அடையுமா??

:(:(:(:(

Anonymous said...

// "சற்றுமுன்: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் US $ 124.7 பில்லியன"//

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் US $ 142.7 பில்லியன்
//இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 6.2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 142.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. //
135.5 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 142.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

சிவபாலன் said...

பரணீ

அந்த சுட்டியை அப்படி கொடுத்திருக்கிறோம்.

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

அந்த சுட்டியும் தவறாக இருப்பதை இப்பொழுது பார்த்தேன்.

எனினும் நன்றி

bala said...

சிவபாலன் அய்யா,
இந்த பணத்திலிருந்து மஞ்ச துண்டு அய்யா ரெண்டு பில்லியன் டாலரும்,பச்சை புடவை அம்மா ஒரு பில்லியன் டாலரும் அமுக்கியிருப்பாங்களா?பாருங்க இப்படித்தான்.பழி ஓரிடம் பாவம் ஒரிடம் என்பது போல், பணத்தை அழுத்தியது திராவிட கும்பல், கடனை திருப்பிகொடுக்க வேண்டியது ஏழ்மையில் வாடும் எம் மக்கள்.

பாலா

சிவபாலன் said...

பாலா..

வாங்க.. எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..

நலமா?!

வருகைக்கு நன்றி..

சிவபாலன் said...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

வெளிநாட்டு வணிகக் கடன்கள்
வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததற்கான காரணம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டு வணிகக் கடன்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்டுகள் போன்றவற்றால் வெளிநாட்டுக் கடன் அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

இதே காலாண்டில் வெளிநாட்டு வணிகக் கடனும் 3,598 கோடி டாலராக (ரூ.1,58,312 கோடி) அதிகரித்துள்ளது. இது, நடப்பு நிதி ஆண்டின், சென்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டை விட 11 சதவீதம் அதிகமாகும்.

என்.ஆர்.ஐ.:

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்டின் அளவு 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 186.70 கோடி டாலர் (ரூ.8,214.80 கோடி) உயர்ந்து, 3,838.20 கோடி டாலராக (1,68,880.80 கோடி) அதிகரித்துள்ளது.

2007-ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்டின் பங்களிப்பு 26.9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pot"tea" kadai said...

இன்னும் 2 வருசத்துல சூப்பர் பவர் ஆய்டுவோம். அப்ப அடச்சிக்கிடுவோம் அது வரிலும் வாங்கிட்டு இருப்போம்

ஜெய்கிந்து

சிவபாலன் said...

Pot"tea" kadai,

உங்கள் வார்த்தை பலிக்கட்டும்!!

-o❢o-

b r e a k i n g   n e w s...