ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய குழு தங்களுடைய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
பத்து சதவீதம் முஸ்லீம்களுக்கும் ஐந்து சதவீதம் கிறித்துவர்களுக்குமாக வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்துறைகளில் பதினைந்து சதவிகித இடங்களை சிறுபான்மையினரால் நடத்தப்படாத ஸ்தாபனங்களில் ஒதுக்குமாறு சிபாரிசு செய்திருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தர தற்போது வழியில்லை. 1950-ல் இட்ட குடியரசுத் தலைவரின் பிரகடணையின்படி ஹிந்து அல்லாத பழங்குடியினர், இட ஒதுக்கீட்டினால் பயன் பெற முடியாது. விதிவிலக்காக சீக்கியர்களையும் பௌத்த மதத்தவர்களையும் ஜாதி அடிப்படையில் பின்னர் சேர்த்துக்கொள்ள மாற்றங்கள் நிறைவேறியது.
இதற்கு முன்பே தலித் முஸ்லிம்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை நிறுவுமாறு சச்சார் செயற்குழு பரிந்துரைத்தது நினைவிருக்கலாம்.
NDTV.com: Panel suggests 15% minority quota
Friday, May 25, 2007
சிறுபான்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு தர பரிந்துரை
Labels:
இடஒதுக்கீடு,
இந்தியா,
கல்வி,
சமூகம்
Posted by Boston Bala at 2:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment