கர்நாடக அரசுக்குச் சொந்தமான மைசூர் லேம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருபவர் விஜயகுமார். முதன்மைச் செயலாளர் அந்தஸ்துள்ள ஐஏஎஸ் அதிகாரி. கர்நாடகத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
தான் பணியாற்றும் துறைகளில் முறைகேடு, ஊழலை சுட்டிக்காட்டி வருவதால் இவர் எந்தத் துறையிலும் நீண்ட நாள் பணியாற்றியதில்லை. கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2007-ம் ஆண்டு பிப்ரவரி வரை 6 மாதங்களில் 6 துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார் இவர்.
விஜயகுமாரின் நேர்மையான செயல்பாட்டால் அவர் அடையும் மன உளைச்சல், சலிப்பை பார்த்து ஊழலுக்கு எதிராக இப்போது ஆட்களை திரட்டி வருகிறார் இவரது மனைவி ஜெயஸ்ரீ.
இதற்காக இவர் இப்போது http://fightcorruption.freespaces.com & http://jayashree.wikidot.com
என்ற பெயரில் இரு இணையதளத்தை துவக்கியுள்ளார். ஊழலில் ஈடுபட்டு, தகவல் உரிமை சட்டப்படி விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் இதில் வெளியிடப்படும்.
தினமணி
Friday, May 25, 2007
ஊழலுக்கு எதிராகப் பிரசாரம்: கைகொடுக்கிறது இணைய தளம்
Posted by
Boston Bala
at
2:24 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
அப்பாடியோவ்!!
ரொம்ப பாசக்கார பொம்பளையா இருக்காங்களே?
முழுவதும் பார்க்கவில்லை,முடிந்தால் மீண்டும் வந்து சொல்கிறேன்.
ரமணா.... சீக்கிரம் வாப்பா,தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவையே காப்பாத்து,முடியாவிட்டால் பாவம் இந்த ஜோடியையாவது காப்பாத்து.
இதில் ஒரு பொது ஜனம் எங்கிருந்து எப்படி உதவ முடியும்?குழப்பமாக இருக்கு.
ஏதோ செய்யனும் என்று மட்டும் தோனுகிறது ஆனால் "BadNews India" சொன்னது போல் எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை.
---ஏதோ செய்யனும் என்று மட்டும் தோனுகிறது ---
அதே... அதே...
---எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை---
தலைவர்கள் & வழிகாட்டிகளை எதிர்நோக்கி... :)
Post a Comment