.

Wednesday, May 30, 2007

ச: மதுரை மேற்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்

மதுரை, மே. 30-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனாலும் மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ராஜாங்கம், தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ், ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம், கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை, மாணவரணி செயலாளர் உதய குமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம், முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால் கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.

எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...