.

Wednesday, May 30, 2007

பெண்களை போல விமானப்பணியில் ஆண்கள் அறிமுகம்.

இந்த ஆண்டு 100 பேருக்கு பயிற்சி
விமானத்தில் பயணம் செய்யவே முடியாத சாமானியர்களுக்கு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் சொல்லவா வேண்டும்ப விமானத்தில் எப்போதும் அல்லவா பறக்கலாம்.ஆதி திராவிட மாணவர் களுக்கு அந்த வாய்ப்பை தமிழக அரசு அளித்துள்ளது. கடந்த ஆண்டு முதன் முதலாக ஆதி திராவிட பெண்களுக்கு விமானப் பணி பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பிளஸ்-2 படித்து முடித்த 100 மாணவிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒரு ஆண்டு பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு அரசு சார்பில் விமானப்பணிப் பெண் வேலை பெற்று தரப் படுகிறது. மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் பெற முடியும். படித்த ஆதிதிராவிட பெண் களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு கொண்டு வந்த திட்டம் இந்த ஆண்டு முதல் மேலும் விரிவு படுத்தப்படுகிறது.பெண்களை போல ஆண்களுக்கும் விமானப் பணி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்-2 முடித்த 100 ஆதி திராவிட மாணவர்கள் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு.....
மாலை மலர்

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//விமானத்தில் பயணம் செய்யவே முடியாத சாமானியர்களுக்கு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் சொல்லவா வேண்டும்ப விமானத்தில் எப்போதும் அல்லவா பறக்கலாம்.ஆதி திராவிட மாணவர் களுக்கு அந்த வாய்ப்பை தமிழக அரசு அளித்துள்ளது//

இந்த சொற்றொடர்கள் ஆதி திராவிடர் என்றால் சாமானியர் தான், விமானத்தில் பயணம் செய்ய இயலாதவர்கள் என்ற எதிர்மறை தொனி கொண்டிருப்பதாகப் படுகிறது. பிற தளங்களில் இருந்து எடுத்துத் தரும் செய்தி தான் என்றாலும், இது போன்ற வாசகங்களை நாமாவது தவிர்த்து மீதியைத் தரலாமே..அதுபோல் தமிங்கிலச் செய்திகளையும் அப்படியே வெட்டி ஒட்டாமல் எளிமையான சொற்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, மூலச் செய்தியில் ஐகோர்ட்டு என்று இருந்தால் நாம் நீதிமன்றம் என்று குறிப்பிட்டுப் பதிவு இடலாம்..நீண்ட கால நோக்கில் செய்திகளுக்கான இணைப்புத் தளம் என்றில்லாமல் நடுநிலையான, நல்ல தமிழ்ச் செய்தித் தளம் என்று சற்றுமுன் அறியப்பட இது உதவும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...