சீனாவில் ஆபாசத்தளம் தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் தடை செய்யப்பட்டது.
www.rsf-chinese.org என்ற தளம் மே 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கி ஐந்திலிருந்து எட்டு மணி நேரத்துக்குள்ளாகவே இந்தத் தளம் சீனா முழுவதும் தடை செய்யப்பட்டது.
தள நிர்வாகிகள், மூன்று வாரம் கழித்து, வேறொரு நிறுவனத்தின் இணையத் தொடர்புச் சேவையூடாக மே 25ஆம் தேதி மீண்டும் அதே தளத்தை வேறு புதிய பெயரில் வெளியிட்டார்கள். மீண்டும் அதே ஐந்திலிருந்து எட்டு மணி நேரத்துக்குள்ளாக இந்த தளம் தடை செய்யப்பட்டு விட்டது.
www.rsf-chinese.org ஐச் சோதனை முயற்சியாகத் தொடங்கிய 'ஊடக சுதந்திரக் குழு', "சீன இணைய காவலர்கள்(cyber police) கீழ்த்தரமான, ஆபாச உள்ளடக்கம் கொண்ட சீன மொழித்தளங்களைக் கண்காணிக்கும் மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்" என்றும், ஆயிரம் இணைய தளத்துக்கு ஒரு தளம் என்ற கணக்கில் சீன மொழித் தளங்கள் இதுபோல் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
பாரிஸ் வழக்கறிஞர் ஒருவர் சீனாவின் இது போன்ற தடைகளை இணைய விரோத நடவடிக்கை என்கிறார். முப்பதாயிரத்திலிருந்து, நாற்பதாயிரம் இணைய காவலர்களை சீன அரசாங்கம் இது போன்ற பணியில் ஈடுபடுத்தி இருக்கும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள்.
DNA செய்தி
Wednesday, May 30, 2007
சீனாவின் சைபர் போலீஸ் - சில மணிகளில் தடை செய்யப்பட்ட ஆபாசத்தளம்
Labels:
இணையம்
Posted by பொன்ஸ்~~Poorna at 5:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
12 comments:
//சீனாவில் ஆபாசத்தளம் தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் தடை செய்யப்பட்டது. //
ம்ம்ம்ம்ம்ம்... (பெருமூச்சு தாங்க...!! ) :(
ம்ம்ம்ம்ம்ம்... (இதுவும் பெருமூச்சு தாங்க...!! )
இது ஆபாசதளம் அல்ல. உங்கள் செய்தி தவறு.
அது blog தளம் போல் தெரிகிறது செய்தி உண்மை போல் தெரியவில்லை
DNA - World - China shuts down media freedom site 'within hours' - Daily News & Analysis: 'Reporters Without Borders'- இன் சீன மொழித்தளம் என்கிறார்களே...
தொடர்பில்லாத இன்னொரு செய்தி: How good are the censors in China? | CNET News.com
அனானி,
// It said that Chinese cyber-police were using detectors containing subversive and pornographic keyword filters to identify undesirable new sites. //
இதில்,
pornographic keyword => என்பதற்கு ஆபாசம் தவிர்த்த வேறு பொருள் இருக்கிறதா? இருந்தால், சொல்லுங்க.. தெரிஞ்சிக்கிறேன்..
கண்றாவி.
நீங்கள் எழுதியதில் எத்தனைமுறை ஆபாசம் என்ற வார்த்தை வந்திருக்கிறது என்பதையும், ஆங்கில செய்தியில் எங்கே போர்னோகிராபிக் என்ற வார்த்தை எப்படி எத்தனை முறை வருகிறது என்பதையும் பார்த்தால் தெரியும்.
இதன் பெயர் செய்தி அல்ல. செய்தி திரிப்பு.
அனானி..
உங்கள் 'கண்றாவி' பின்னூட்டத்துக்கு நன்றி. அதிகமாக 'ஆபாசம்' என்கிற வார்த்தையை பயன்படுத்த்யதால் என்ன ஆயிற்று?
எந்த பலனையும் நோக்காமல் செய்திகளை பகிர்ந்துகொள்ளும் மக்களை இப்படித்தான் ஊக்குவிப்பீங்களா.
பதிவகளோடு தனிப்பாட்ட கருத்தாடல்களை தத்தம் பதிவுகளில் நடத்தலாமே.
இதையே தினமலரோ தின தந்தியோ சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.
பாராட்ட மனமிருந்தால் செய்யுங்கள் குறைகளை நேர்மையுடன், சேவை முன்னேறும் வகையில் எடுத்துவையுங்கள். மாறாக எதிர்மறை உணர்வுகளை ஏர்ப்படுத்தும்வண்ணம் வேண்டாமே?
அனானி கொஞ்சம் தன் கருத்த மரியாதையா சொல்லி இருக்கலாம்.
செய்திய பார்த்தா, தடை செய்யப்பட்டது ஆபாச தளம் போல தெரியல. ஆபாசம்-ங்கிற வார்த்தை சீன அரசாங்கம் பயன்படுத்தும் மென்பொருள பத்தி சொல்லுது. தடை செய்யப்பட்ட தளம், "subversive" வகையில் அடங்கும்னு தோணுது.
கண்ணறாவி அனானி அண்ணாச்சி! (மன்னிக்க, ஏதாச்சும் புனைபேராவது சொல்லிருந்தீங்கன்னா இன்னும் சுலபமா அழைச்சிருக்கலாம்..)
இது செய்தித் திரிப்பாவே இருக்கட்டுங்கணா... ஆங்கிலச் செய்தியத்தான் சுட்டியோட கொடுத்திருக்கமேங்கணா.. நீங்க புரிஞ்சிட்ட விதத்துல தமிழாக்கம் செஞ்சி போடுங்கணா... அதையும் மேலே, உங்க பேரைச் சொன்னா பேரோட, இல்லையின்னா அண்ணன் கண்ணறாவி அனானியின் தமிழாக்கம்னு எழுதி சேர்த்திடறேங்கணா.. எப்படி வசதி?
http://64.233.179.104/translate_c?u=http%3A%2F%2Fwww.rsf-chinese.org%2F&langpair=zh-CN%7Cen&hl=en&ie=UTF8
Read this.(அந்த ஆபாச தளத்தின் ஆங்கில ஆக்கம்)
Reporters without Borders "condemns the Chinese authorities have been placed under house arrest and Hu Jia Jin
23.05.2007 -胡佳和曾金燕,这对以保卫新闻自由而出名的夫妻于2007年5月18日在北京被中国当局拘捕,理由是“威胁国家安全”。23.05.2007-Jin Hu Jia and Zeng. This right to defend the freedom of the press and famous couples in the May 18, 2007 in Beijing by the Chinese authorities arrested The reason is "a threat to national security." “无国界记者”对此表示强烈谴责。"Reporters without Borders" has expressed its strong condemnation. 尽管法国政府已经发给他们签证,但中国当局禁止他们出境Although the French government has issued a visa, but the Chinese authorities forbid them to exit
சிறில் அலெக்ஸ்
//எந்த பலனையும் நோக்காமல் செய்திகளை பகிர்ந்துகொள்ளும் மக்களை இப்படித்தான் ஊக்குவிப்பீங்களா.
இதையே தினமலரோ தின தந்தியோ சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.
//
முதலில் செய்தியின் நம்பகதன்மையை ஆராய்ந்து பின் வெளியிடவும். இல்லைனா எங்க ஆத்துகாரரும் கச்சேரிக்கு போறாருன்ர மாதிரி இருக்கும்.
//It said that Chinese cyber-police were using detectors containing subversive and pornographic keyword filters to identify undesirable new sites.//
இது சொல்வது என்னவெனில் pornographic keyword filters ஐ சீனாவில் உபயோகிக்கிறார்கள். இதன் மூலம்தான் அந்த தளம் தடுக்கபட்டது என்று சொல்லவில்லை.
"Reporters Without Borders" என்ன உங்களுக்கு ஆபாச வலைதளமா?..
இந்த தளம் சீன மொழியில் மட்டும் இல்லை என்பதாவது தெரியுமா?.
இதைகூட ஆராயமல் எப்படி ஒரு அவசரமுடிவுக்கு வரமுடிந்தது?.
(நான் முதலில் வந்த அனானி இல்லை. நான் வேற ஒரு id உள்ள அனானி. அவசரத்துல,(firewallலையும்) login பண்ணமுடியவில்லை.)
ஐடி உள்ள அனானி,
என் மொழிபெயர்ப்பில் தப்பே இல்லன்னு நான் சொல்லவில்லை.. தவறுகளுக்கு வாய்ப்பிருப்பதால் தான் சுட்டிகளும் கொடுக்கிறோம்.
முன்னமே கேட்டுக் கொண்டது போல், நீங்களோ, அல்லது பழைய 'நாகரிக' அனானி அண்ணனோ, சரியான, நல்ல தமிஔழில் (நீங்க மீண்டும் சீன-ஆங்கிலத்துல ஏதோ கொடுத்திருக்கீங்க..) கொடுத்தா போடுறேன். இல்ல, வெறுமே வறட்டு விவாதம் செய்யத்தான் ஆசைன்னா, அதுக்கு இப்போதைக்கு நேரமில்ல பாஸ்.. மன்னிச்சுக்குங்க.
Post a Comment