.

Thursday, May 24, 2007

இழுத்து மூடு !

மூன்று பக்கம் கடலாலும் நான்கு பக்கம் கடனாலும் சூழப்பட்டு இந்தியாவை தடுமாற வைப்பதிலும் தள்ளாட வைப்பதிலும் மது முக்கியக் காரணமாக உள்ளது காந்தியடிகள் நாடு முழுவதிலும் மதுவிலக்கு செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை பெருமளவில் நடத்தினார்.காந்தியடிகள் மது எதிர்ப்பு போராட்டத்தைதமிழகத்தில் பெரியார் வலுப்படுத்தினார்.கள்ளை ஒளிப்பதற்க்காக் ஆயிரக்கணகான தென்னை மரங்களை பெரியார் வெட்டி சாய்த்தார்.கள்ளுக்கடை போராட்டத்தை கைவிடுவார்களா? என்று காந்தியிடம் செய்தியாளர் கேட்டபோது ஈரோட்டில் உள்ள இரு பெண்களிடம் கேட்டுத்தான்(பெரியாரின் மனைவி மற்றும் சகோதரி)அதை முடிவெடுக்க முடியும் என்று காந்தியடிகள் கூறுமளவுக்கு பெரியாரின் குடும்பம் அந்த போராட்டத்தில் பங்கேற்றது காந்தி வழி வந்தவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரியார் வழி வந்தவர்கள் தமிழகத்தையும் மாறி மாறி ஆண்டு வருகின்றனர் ஆனாலும் மதுவுக்கு தடை ஒரு போதும் இல்லை.

காந்தி சிலைபக்கத்தில்
கள்ளுக்கடை,
மக்கள் போராடினார்கள்
அரசாங்கம் அகற்றியது
கள்ளுக்கடியை அல்ல
காந்தி சிலையை
என்ற நிலைதான் நாட்டில் நிலவுகிறது
"அவன் குடித்தான்
குடும்பம் தள்ளாடுகிறது"

என்ற நிலை வீட்டில் நிலவுகிறது.கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு அங்கே படித்த இளைஞர்களுக்கு வேலை(?) வழங்கப்பட்டது.இதை விட கேவலமாக கல்வியை அவமதிக்க முடியாது புதிதாக பொறுப்பேற்ற தி மு க அரசு மதுக்கடைகளை மூடியிறுக்க வேண்டும் அதைச்செய்யவில்லை மதுவால் வருமானம் வருவதாக கூறுவது அவமானம் குடிமக்களை,குடிகாரர்களாகுவதால் உழைப்பு ஊனப்படுகிறது ஆள்வோர் இதை அறியாதவர்கள் அல்ல ஆனாலும் மதுகடைக்கு பூட்டு போடமுடியவில்லை காரணம் மதுவுக்கு அரசியல் கேடயமாகிவிட்டது மத்திய மாநில அரசுகள் மதுவை ஒழிப்பதில் உறுதி பூண வேண்டும் மத வெறி மது வெறியும் நாட்டின் முதன்மை எதிரிகள் என்பதை உணர்ந்து மதுகடைகலை அர்சு இழுத்துமூட வேண்டும். திருப்பூரில் நேற்று நடந்த சோக சம்பவத்தை நினைவில் கொள்ள வேண்டும் செய்வார்களா ?

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சற்றுமுன்னில் செய்திகளை மட்டும் இடுகைகளாகத் தந்தால் நன்று. இது போன்ற editorial, கருத்துக்களை பின்னூட்டத்தில் தரலாம்.

Adirai Media said...

அருமை நண்பர் ரவி சங்கர் அவர்களே...பொதுவான விஷயம் என்றுதான் சற்று முன்னில் பதிய எண்னினேன்......

-o❢o-

b r e a k i n g   n e w s...