.

Thursday, May 24, 2007

'அல்லா' பெயரில் பதவி பிரமாணம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும்போது அல்லா பெயரில் பதவி பிரமாணம் ஏற்றது அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடி ஆகுமா என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கேரள மாநில பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் மது பருமலா, இதுதொடர்பாக முன்னதாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: அதில், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்யும்போது 'கடவுள் அறிய' என்றோ அல்லது 'உளமார' என்றோ கூறி தான் உறுதி மொழி ஏற்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்தவொரு தனிப்பட்ட கடவுளின் பெயரையும் குறிப்பிட்டு உறுதி மொழி ஏற்க சட்டத்தில் கூறப்படவில்லை. இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இந்திய தேசிய லீக் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள், கடந்த 2004 மே 24-ல் பதவியேற்கும் போது அல்லாவின் பெயரில் உறுதி மொழி ஏற்றுள்ளனர்.

ஆதலால், அவர்களது பதவியேற்பை ரத்து செய்ய வேண்டும் என கோரி இருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அல்லா பெயரில் பதவி பிரமாணம் எடுத்ததில் தவறில்லை என தீர்ப்பளித்திருந்தது.

தினமணி

7 comments:

Anonymous said...

அன்பார்ந்தவர்களே...
ஒன்றை சிந்திக்க வேண்டும் எவன் எந்த மதத்தை சார்ந்தவனோ அந்த மதத்தின் சார்ந்து சத்தியம் செய்தால் அவன் அதிலிருந்து எந்த தவறும் செயாமலிருப்பன் ஆனால் அதைவிட்டுவிட்டு இதில் எல்லாம் அரசியால் ஆதாயம் தேடும் இது போன்ற அரசியல் அயோக்கியர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

விடுதலை முருகன்.

முத்துகுமரன் said...

அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள். இறைவன் பெயரால், கடவுள் பெயரால் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. இதை விசாரனைக்கு எடுத்திருப்பது தேவையற்ற ஒன்று.

மாசிலா said...

//அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள்.//

அப்படி என்றால் இறைவன் என்றாலும் அல்லா என்றுதானே பொருள். அப்படியிருக்கு எல்லோரையும் போல் இறைவன் பெயரிலேயே பதவி பிரமாணம் ஏற்றிருக்கலாமே?

Boston Bala said...

மாசிலா... சிந்திக்க வைக்கும் கருத்து

வஜ்ரா said...

இறைவன் என்றாலும் அல்லா என்றுதானே பொருள். = Tolerance


அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள். Yes.

But the question is ?

அல்லா என்றால்தான் இறைவன் என்று பொருளா ?

ஆம் என்றால் Intolerance என்று பொருள்.

முத்துகுமரன் said...

மாசிலா, இந்திய அரசியலைப்பு சட்டம் தனிநபர் மத உரிமையை அடிப்படை உரிமையாக வழங்கி இருக்கிறது. கடவுளின் பெயரால்தான் அவரும் உறுதி மொழி எடுத்திருக்கிறார். In the Name of God, கடவுளின் பெயரால் இரண்டும் ஒன்றே. அல்லாவின் பெயரில் உறுதிமொழி எடுத்தது தவறு என்றால் பொதுமையாக இன் தி நேம் ஆப் காட் தமிங்கிலத்தில் உறுதிமொழி எடுப்பதுதான் சரியாகும். எப்படி ஆங்கிலத்தில் இருப்பதை கடவுளின் பெயரால் என்று மொழி மாற்றம் செய்ய உரிமை இருக்கிறதோ அதே உரிமை அவனுக்கும் உண்டு
**
வஜ்ரா

சம்பந்தப்பட்டவனுக்கு அல்லா என்றால்தான் கடவுள். ராமனோ, காளியோ கடவுளாக இருக்கத்தேவையில்லை. உங்களுக்கு எப்படி அல்லா கடவுளாக இல்லையோ அதே போலத்தான் அவனுக்கும்.

இறைவனின் பெயரால் உறுதி மொழி எடுத்தவன் இஸ்லாமியன் என்பதால் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டம்தான் அக்மார்க் Intolerence

Anonymous said...

முத்துக்குமரன்,
ரொம்பவும் தெரிந்தாற்போல மார்க்க விஷயங்களில் உளறக்கூடாது. அல்லாவும் இந்துக்கள் கும்பிடும் இறைவனும் ஒன்று அல்ல. எங்களுக்கு ஆதரவாக பேச நீங்கள் வந்திருப்பது நல்லதுதான். ஆனால், மார்க்க விஷயங்களை எங்களிடம் விட்டுவிடுதல் உங்களுக்கு நல்லது.

ஸூரத்துல் காஃபிரூன்

109:1 (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்

அல்லா வேறு. நீங்கள் கும்பிடும் இறைவன் வேறு.
தெரிகிறதா?

-o❢o-

b r e a k i n g   n e w s...