.

Tuesday, June 26, 2007

ச:அணுசக்தி போர்க்கப்பலால் சென்னைக்கு ஆபத்து: ஜெயலலிதா

சென்னைக்கு வரப்போகும் அமெரிக்க அணுசக்தியினால் இயங்கும் விமானந்தாங்கி போர்கப்பலால் சுற்றுப்புறத்திலிருக்கும் மக்களுக்கு தீங்கு விளையும் என்று அதிமுக தலைவர் செயலலிதா நடுவண் அரசை இதனை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கதிரியக்க தீமையினால் ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் இக்கப்பலுக்கு தங்கள் கடற்பகுதியில் அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்கக் கப்பல் USS Nimitz ஜூலை ஒன்று முதல் ஜூலை 5 வரை சென்னை துறைமுகத்தில் தங்கியிருக்கும்.
இது பற்றி The Hindu செய்தி

அதே நேரம்அமெரிக்கஅரசின் சென்னை கான்சுலேட் ஜெனரல் அலுவலகம் இந்தக்கப்பலினால் எந்த தீங்கும் நேராது
என்று அறிக்கை விட்டுள்ளது. தனது 56 வருட பணிக்காலத்தில் ஒரு விபத்தைக் கூட சந்திக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

1 comment:

Anonymous said...

அச்சச்சோ! குண்டோதரி ஆட்சி செய்தே சென்னைக்கு ஆபத்தில்லை. அமெரிக்க கப்பல் வந்தா ஆபத்து? நம்ப முடியலப்பா!!


புள்ளிராஜா

-o❢o-

b r e a k i n g   n e w s...