.

Monday, June 18, 2007

ஜாதி ஒழிய வேண்டும்: கருணாநிதி

தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேறாததற்கு காரணம் அவர்களுக்காகப் போராடுபவர்களை அவர்கள் உணர்ந்து கொள்ளாததுதான் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

இங்கே பல கோரிக்கைகளை வாசித்து, அவற்றை நிறைவேற்ற வழி காணுங்கள் என்றார் திருமாவளவன். இந்த கோரிக்கைகள் சில ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பின்பு இதுபோன்ற மண்ணுரிமை மாநாட்டில் அமைக்கப்படும் மேடை குடிசையாக இல்லாமல் மாளிகையாக அமைய வேண்டும். மாளிகை என்றால் அது கொடநாடு மாளிகை அல்ல. அது நமது உழைப்பில் உருவான மாளிகையாக அமையும். அதற்கு என்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்வேன். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் படைக்கும் நானே தலைமை தாங்குவேன்.

ஜாதி ஒழிய வேண்டும்:

இங்கே நிறைவேற்றின 23 தீர்மானங்களின் சுருக்கமே ஜாதி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியை ஒழித்துவிட்டால் 23 தீர்மானங்களையும் நிறைவேற்றி விடலாம். என்னுடைய 70 ஆண்டு பொதுவாழ்வில், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தில் இருந்து கிஞ்சித்தும் நான் விலகியது கிடையாது.

திருமாவளவன் பேச்சு

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மீட்டு எடுக்கும் ஆளுமைத் திறன் கருணாநிதியிடம் மட்டும்தான் உள்ளது என்றார் திருமாவளவன். இந்த மண்ணின் சொந்தக்காரர்கள், ஒடுக்கப்பட்டகளாக சமுதாயத்தின் விளிம்பில் உள்ளனர். அவர்களை மீட்டெடுக்கக் கூடிய ஆளுமைத் திறன் முதல்வர் கருணாநிதியிடம்தான் உள்ளது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...