.

Monday, June 18, 2007

கனிமொழியின் தகுதி: ஜெ.க்கு திமுக பதில்

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார், அவரை பற்றி பேச அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு என்ன தகுதியுள்ளது என திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு மாநிலங்களை உறுப்பினர் பதவி பெற என்ன தகுதியிருக்கிறது என அதிமுக பொதுசெயலாளர் கேட்டுள்ளார்.

எம்ஜிஆர் படங்களில் நடித்த ஒரே தகுதியை வைத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அந்த பொறுப்பிலிருந்து கொண்டு கட்சிக்காக நீங்கள் செய்தீர்கள். திமுகவிற்காக கனிமொழி என்ன செய்திருக்கிறார் என கேட்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது.

அதிமுகவின் தலைவர் பதவியிலுள்ள நீங்கள் கட்சிக்காக என்ன தியாகம் செய்தீர்கள். எத்தனை முறை போராட்டத்தின் மூலம் சிறைக்கு சென்றீர்கள். சசிகலாவின் உறவினரான தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவரை விட திறமைசாலிகள், தியாகம் செய்தவர்கள் கட்சியில் இல்லாமல் போய்விட்டார்களா.

திமுக கனிமொழிக்கு பதவி வழங்கியுள்ளது. கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.

அதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.


தட்ஸ் தமிழ்

1 comment:

Anonymous said...

அடேங்கப்பா ... என்னா அறிவு.

தினகரனுக்கு எம்பி போஸ்ட் கொடுக்கறதை கருணாநிதி கேள்விகேட்கக்கூடாது
கனிமொழிக்கு எம்பி போஸ்ட் கொடுக்கிறதை ஜெயா கேள்வி கேட்கக்கூடாது

ரத்தத்தின் ரத்தங்கள் அம்மா செய்யறதை கேள்வி கேட்கமாட்டார்கள்.
உடன் பிறப்புகள் அய்யா செய்யறதை கேள்வி கேட்க மாட்டார்கள்.

ஒரே கூத்துதான்.
இரண்டு கட்சியிலும் இல்லாதவர்கள் வந்துதான் இவர்களையெல்லாம் கூட்டி பெருக்கி குப்பையில் போடணும்,

-o❢o-

b r e a k i n g   n e w s...