.

Monday, June 18, 2007

திடீர் திருப்பம்: இரண்டை பின்னுக்குத்தள்ளும் மூன்று.

குடியரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளான தே.ஜ.கூ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும், துணை குடியரசுத்தலைவருமான பைரோன்சிங் ஷெகாவத், மூன்றாவது அணியின் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் தாம் பின் வாங்கக்கூடும் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

'மூன்றாவது அணியினரின் கோரிக்கைக்கு அப்துல்கலாம் இணங்கி இத்தேர்தலில் நிற்பாரானால், அதைவிட தமக்கு மகிழ்ச்சி வேறில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய முடிவு இன்னும் மீதமிருக்கிறது என்றார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களிடையே எவ்வித கருத்து வேறுபாடும் ஏற்பட்டதே இல்லை" என்றார் அவர்.

இதற்கிடையில், பா.ஜ.க கூட்டணியிலிருக்கும் சிவசேனா கட்சி, அப்துல்கலாம் பற்றி 'அதிருப்தி' தெரிவித்துள்ளது. 'நந்திகிராம்' உள்ளிட்ட சம்பவங்களுக்காக அவருடைய 'ஆட்சிக்காலத்தை' திருப்தி என்று சொல்ல முடியவில்லை என்று சிவசேனா கூறியுள்ளது. ஷெகாவத் பற்றி அக்கட்சி இதுவரை கருத்தளிக்கவில்லை.


Shekhawat hints at withdrawing from Prez race


Sena mum on Shekhawat, disfavours Kalam's re-election

1 comment:

Anonymous said...

wow..........
=============================
கலாம் போட்டி? * ஜனாதிபதி தேர்தலில் 3வது அணியின் வேட்பாளர்... * சென்னையில் எட்டு கட்சி தலைவர்கள் தீர்மானம்
============================
அப்துல் கலாம் போட்டியிட்டால் வாபஸ் பைரோன்சிங் ஷெகாவத் திடீர் முடிவு
=============================

-o❢o-

b r e a k i n g   n e w s...