நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு சந்திரபாபு நாயுடு திடீரென தாங்குவது ஏன்?. அவர் இப்படத் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளாரா? என்று ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.
ஹைதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரகுவீர ரெட்டி,பிரதாப ரெட்டி, காடே வெங்கட ரெட்டி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அவர்களிடம் செய்தியாளர்கள் பேசுகையில், சிவாஜி படத்தை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நாயுடு கூறியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.
மாவட்ட நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் அழைத்து, கண்டிப்பாக ஒவ்வொரு தொண்டரும் சிவாஜியைப் பார்க்க வேண்டும் என நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் எங்களுக்கு சில கேள்விகள் எழுகின்றன. ஒன்று, சிவாஜி படத்தில் சந்திரபாபு நாயுடு, மறைமுகமாக முதலீடு செய்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த அளவுக்கு படத்துக்காக மெனக்கெடுகிறார்.
தட்ஸ் தமிழ்
அல்லது, ரஜினி மூலம் தனது தலையெழுத்து மாறுமா என்று அவர் முயற்சித்துப் பார்ப்பதாக இருக்கலாம். காரணம், காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் மேலும் வலுப்பெற்று வருகிறது. இப்படியே நிலைமை நீடித்தால் இன்னும் 10 வருடங்களுக்கு அவரால் ஆட்சிக்கு வரவே முடியாது.
ஆந்திர அரசியலில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நிலவும் லஞ்ச ஊழல் கருப்புப் பணம் குறித்து சிவாஜி படம் பிரதிபலிப்பதாக உள்ளதால், தெலுங்கு தேசம் தொண்டர்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நாயுடு கூறியுள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.
ஆந்திர அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறினார் நாயுடு. ஆனால் ஒரு புகாரைக் கூட அவரால் நிரூபிக்க முடியவில்லை. நாயுடு விரும்பும் விசாரணைக் கமிஷனை அமைக்கத் தயார் என்று முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்வந்தும் கூட ஆதாரங்களைத் தர முடியவில்லை நாயுடுவால் என்று அவர்கள் கூறினர்.
Monday, June 18, 2007
சிவாஜி: சந்திரபாபு நாயுடு முதலீடு? - காங்கிரஸ்.
Posted by வாசகன் at 8:50 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment