.

Monday, June 18, 2007

சர்ச்சையில் பிரதீபா பட்டீல்.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக ராஜஸ்தான் கவர்னர் பிரதீபாபட்டீல் போட்டியிடுகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்கள் பர்தா அணிவது பற்றி குறிப் பிட்டார். அவர்பேசும் போது பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணிய தேவை இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்த இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில் பெண்கள் பர்தா அணியும் பழக்கம் முகலாயர் ஆட்சி காலத்தில்தான் ஏற்பட்டது. படையெடுத்து வந்த முகலாயர் களிடம் இருந்து பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர் என்றும் குறிப்பிட்டார். பிரதீபா பட்டீலின் இந்த பேச்சு அவரை சர்ச்சையில் தள்ளி இருக்கிறது. முஸ்லிம்கள் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல் சரித்திர வல்லுனர்களும் பிரதீபா பட்டீலின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2 comments:

Anonymous said...

அப்படி போடு அருவாள....எதானும் ஒண்ண சொல்லி மாட்டிக்கிட்டா சரி...அதுவும் மைனாரிட்டி மக்களுக்கு எதிரா சொன்னா எப்படி....மாற்றுங்க வேட்பாளரை....

வீணா போன அரசியல்,,,

Anonymous said...

பர்தா பற்றி பிரதீபா பட்டில் பார்தா பற்றி சொன்ன கருத்தில் எனக்கு பாதி உடன்பாடு. பட்டீல் சொல்வதுபொல் பர்தா அவசியமில்லைதான் இந்தோனேசியா, மலேசியா, புருனை ஏன் இந்தியாவின் பல பகுதிகளிலும் - குறிப்பாக தென் இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை.

ஆனால் முகலாயர்கள் வருகை காரணமாகத்தான் இந்தியப்பெண்கள் பர்தா அணியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்ற (பிரதீபா பட்டில் உண்மையிலேயே சொல்லியிருந்தால்) என்ற பட்டீலின் கூற்று 'பாட்டில்' (Bottle) அடித்தவரின் கூற்றாகத்தான் உள்ளது..

பிறைநதிபுரத்தான்

-o❢o-

b r e a k i n g   n e w s...