.

Wednesday, June 6, 2007

பி.சுசீலா: இரண்டாவது இன்னிங்ஸ்

பொட்டு வைத்த முகத்தை தொட்டு வைத்த தலைவா...உனக்கொரு உனக்கொரு கோரிக்கை...தொட்டுவைத்த முகமும் விட்டுவைத்த அழகும்...உனக்கொரு உனக்கொரு காணிக்கை...'' என்று அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தது.

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாடகியாக கொடிகட்டி பறந்த பி.சுசீலா, பல வருடங்களாக சினிமாவில் பாடவில்லை. மேடைகளில் மட்டும் பாடி வந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப்பின், அவர் சினிமாவுக்காக பாடினாலும், அந்த இனிய குரல் இன்னும் அப்படியே இருப்பதாக கவிஞர் வைரமுத்துவும், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் கூறினார்கள்.

பி.சுசீலா பேட்டி

மிக நீண்ட இடைவெளிக்குப்பின், சினிமாவுக்காக பாடியது பற்றி பி.சுசீலா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

``1952-ம் ஆண்டில் நான் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனேன். `பெற்ற தாய்' என்ற படத்துக்காக, ``ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு அழைத்தாய்'' என்ற பாடலை முதன்முதலாக பாடினேன்.

இதுவரை தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிவிட்டேன். கடைசியாக, `புதிய முகம்' என்ற படத்துக்காக 1994-ம் ஆண்டில் பாடினேன். ``கண்ணுக்கு மையழகு'' என்ற அந்த பாடலை கவிஞர் வைரமுத்துதான் எழுதியிருந்தார்.

13 வருடங்கள் கழித்து மீண்டும் அவர் எழுதிய பாடலை, இப்போது பாடியிருக்கிறேன்.''

இவ்வாறு பி.சுசீலா கூறினார்.

3 comments:

G.Ragavan said...

மிகவும் நல்ல செய்தி. சமீபத்தில் மலையாளத்தில் கூட அம்மகிளிக்கூடு என்ற படத்தில் "ஹ்ருதய கீதமாய்" என்று பாடிய பாடல் பெருவெற்றி பெற்றது. இந்தப் பாடல் இன்னும் பெருவெற்றி பெற விரும்புவோம்.

Sundar Padmanaban said...

ஆஹா. வெள்ளைக் குயில் மறுபடியும் பாடுகிறதா? என்ன அருமையான செய்தி! ரொம்ப நன்றி.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு பாலுவின் நிகழ்ச்சி ஒன்றில் மிகுந்த தயக்கத்திற்கிடையே மிகவும் கஷ்டப்பட்டு குரல் ஒத்துழைக்காமல் அவர் பாடியதைக் கேட்டபோது கண்ணீரே வந்துவிட்டது.

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாடக் கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா

குயில் இடையறாது கூவட்டும். அவருக்கும் அவரது குரலுக்கும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Sridhar V said...

1996-ல் வந்த இந்தியன் படத்தில் அவர் பாடியிருந்தார். 'கப்பலேறி போயாச்சு! சுத்தமான ஊராச்சு! கண்ணம்மா!!'...

-o❢o-

b r e a k i n g   n e w s...