.

Wednesday, June 20, 2007

இந்திய லெஸ்பியன் ஜோடி- பிரஸ் மீட் போட்டோ


பஞ்சாபைச் சேர்ந்த இவர்கள் கடந்த வாரம் கல்யாணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியர். சுடிதார் போட்டிருக்கும் ராஜ்வீந்தர் கவுர் (20), அவரது தோளில் கைபோட்டவாறு பேன்ட், சட்டையில் இருக்கும் பல்ஜித் கவுர் (21) இருவருமே பெண்கள். தங்கள் கல்யாணத்தை ஊருக்கு தெரிவிக்க அமிர்தசரஸில் நேற்று பிரஸ் மீட் வைத்தது இந்த லெஸ்பியன் ஜோடி. அப்போது கணவி-மனைவியாய் போஸ் கொடுக்கின்றனர்

- நன்றி: மாலைச் சுடர்

34 comments:

சிவபாலன் said...

இவ்வாறு செய்ய இந்தியச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

தனிமனித சுதந்திரத்திற்கு மரியாதை தருகிறேன். ஆனால் இது சட்டப்படி செல்லுமா?

ஒன்றுமே புரியவில்லை.

ALIF AHAMED said...

நல்லா இருக்கட்டும்
ஒன்னுமே புரியவில்லை உலகத்தில

சிறில் அலெக்ஸ் said...

'male' கோர்ட்டில் முறையீடு செஞ்சா தெரிஞ்சுடும். சி.பா
:)

பொன்ஸ்~~Poorna said...

சமீபத்தில் ஏதோ சட்டம் வந்தது இல்லையா சிபா, ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் செல்லும்னு.. நீங்களே கூட பதிவு போட்டீங்க தானே?

Thekkikattan|தெகா said...

சரியாப் போச்சு...!!! ஒளிமயமான எதிர்கலாம் என் கண்களில் தெரிகிறது... :-)

Santhosh said...

அட்டா ஊருக்குள்ள ஏற்கனவே பொண்ணுங்களுக்கு பஞ்சம் இதுல இது வேறயா.. வாலிப பசங்களுக்கு தான் எம்முட்டு பிரச்சனை எம்முட்டு பிரச்சனை.

Unknown said...

//ஒளிமயமான எதிர்கலாம் என் கண்களில் தெரிகிறது... :-)//

யாரு கண்ணுல தெகா?

உண்மைத்தமிழன் said...

கொடுமைதான்.. வேற என்ன சொல்ல..?

Anonymous said...

Such marriages cannot be registered.But they can live
together.In records they cannot be
identified as husband and wife.
Living together is not illegal
although some may say that it is
immoral and they cannot seek divorce from court as law does
not recognise same sex marriages.
The time has come to recognise such marriages and give them the
rights like any other married
couple.
A lesbian girl in search of a female partner :)

Anonymous said...

லெஸ்பியன் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினரின் உணர்வுகள் ஏனையோரிடமிருந்து வேறுபட்டவை. குரோமோசோம்களாலும், ஹார்மோன்களாளும் தீர்மானிக்கப்படுபவை. இன,மொழி,மதச்சிறுபான்மையோருக்கு காட்டப்படும் பரிவு இவர்களுக்கும் காட்டப்படுதல் வேண்டும். தனிமனித உரிமையை மீறும் சட்டங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் யாவும் மனித நேயத்தோடு திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். மேலும் விபரம் அறிய விரும்புவோர், திருநங்கையான லிவிங் ஸ்மைலின் வலைத்தளத்திற்கு ஒரு நடை வந்து போகலாம்.
www.livingsmile.blogspot.com

இளங்கோவன்.

G.Ragavan said...

தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள். மகிழ்ச்சியோடு எந்தத் துயரும் இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களைப் பெண்ணென்றே கருத வேண்டும் என்று வலைப்பூவிலும் அனைவரும் குரல் கொடுக்கும் வேளையில்...இவரையும் ஆண் என்று கருதுவது தவறாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

இங்க நெதர்லாந்துல இதெல்லாம் சட்டப்படியே சரியாம். தனிமனித சுதந்திரம்னு வருது. ஒழுக்கம் அது இதுன்னு பேசுனாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையா நடந்துக்காத வரைக்கும் அது ஏற்கப்பட வேண்டும் என்று கருத்து இங்க இருக்கு. ஒருவிதத்துல இதுவும் சரீன்னுதான் தோணுது. அட இட்லி பிடிச்சவன் இட்லி திங்குறான். நூடுல்ஸ் நுங்குறவன் நூடுல்ஸ் நுங்குறான். சைனீஸ் ஓட்டல் பக்கம் போனா கொஞ்சம் கொமட்டுது. அதுக்காக நம்மூரு சமையல் மட்டுமே ஒசத்தீன்னு சொல்லீர முடியாதுல்ல. அவங்கவங்களுக்கு அவங்கவங்களோடதுன்னு விட்டுற வேண்டியதுதான்.

இதையெல்லாம் பாக்கும் போது, இந்தியாவுலயும் இதைப் பரிசீலிக்க வேண்டிய காலம் வந்துருச்சோன்னு தோணுது.

மங்கை said...

தெகா, சந்தோஷ்...குசும்பு ஜாஸ்தி தான்

இந்திய சட்டப்படி செல்லாது..
under section 377 this is an offence.. against the order of nature..:-)) ஆனா இங்க order of nature னா என்னன்னு விளக்கம் சொல்லையாம்...:-))

டென்மார்க் தான் முதன் முதலில் இதை அங்கீகரித்து சட்டம் கொண்டு வந்தது..

சந்தோஷ்..எதுக்கு இத்தன கவலை... சினிமா வசனம் தான் நியாபகம் வருது...உங்களுக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்க போறா... :-))
ரொம்ப வெசனப்படாதீக..

Anonymous said...

The time has come to recognise such marriages and give them the
rights like any other married.I have seen Desi Lesbian Club in Bay Area CA and been active in Indian Cultural fair as a part of Indian independence celebrations for more than 8 yrs as of my knowledge.

I think Living smile vidya can explain more in details ..

ILA (a) இளா said...

நல்வாழ்த்துக்கள். சோடி நல்லா இருக்கட்டும். புருசன், பொண்டாட்டின்னு சொன்னா சமுதாயம் அவுங்களை கூடிய சீக்கிரமே நாறடிக்கும். தங்க வீடு கிடைக்காது, காய்கறி கிடைக்காது. ஏற்கனவே இதை அவுங்க NDTVல சொன்னதுதான்.

//சந்தோஷ்..எதுக்கு இத்தன கவலை... சினிமா வசனம் தான் நியாபகம் வருது...உங்களுக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்க போறா... :-))//
ஷாட் கட் பண்ணா சந்தோசோட சோடி ஒரு புல் வெளியிலேயோ, குளத்தாங்கரையிலேயோ பாட்டுப்பாடனுமே.

Unknown said...

இளம் தம்பதியினர் மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்.
உடனடியாக சட்ட திருத்தம் கொண்டுவந்து இவர்களை கணவன் மனைவியாக அங்கீகரிக்க வேண்டும். இந்தியாவில் ஓரினச்சேர்க்கையே சட்டப்படி குற்றம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டம் இருக்கிறது. அதை முதலில் தூக்க வேண்டும்.

PRABHU RAJADURAI said...

இந்து திருமண சட்டத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் ஆணும், பெண்ணுமாக இருக்க வேண்டும் என்று கூறப்படவில்லையே! :-))

"இந்தியாவில் ஓரினச்சேர்க்கையே சட்டப்படி குற்றம்"

செல்வன்,

carnal intercourse against the order of nature என்றுதான் இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. இதற்குள்தான் ஒரினச் சேர்க்கையை கொண்டு வர வேண்டும்.

"penetration is sufficient to constitute the carnal intercourse" என்றும் விளக்கம் கூறுகிறது.

It requires atleast a minimum degree of penetration...

Can that happen in a lesbian relationship?

...

If the above section is given a wider interpretation, even a legally married couple indulges in other forms of sex which the victorian moral considers as "against the order of nature" can be prosecuted.

எனவேதான் முன்பு ஒரு முறை சட்டம் உங்கள் படுக்கையறை வரை நுழைகிறது என்று குறிப்பிட்டேன்!

Anonymous said...

ராஜதுரை,
குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் விரிவான இடுகையொன்று எழுதினால் என்ன?
எதிர்பார்க்கிறோம்.

Anonymous said...

Aapu 4 males

துளசி கோபால் said...

இங்கே எங்கூர்லே இந்தக் கல்யாணம் சட்டப்படி செல்லும்.

Murthy said...

இதுல ஒரு விசயம் புரியவில்லை. இந்த வாழ்க்கை வெறும் செக்ஸை மட்டுமே மையமாக கொண்டதா அல்லது அன்பை மையமாக கொண்டதா என்பது.

இது இயற்கைக்கு முரண்பாடு இல்லையா. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இல்லற வாழ்வில் ஈடுபடுதலே சுகம், சந்தோசம் மற்றும் செக்ஸ் இனிமையானதாக அமைய முடியும். இதனால் யாருடைய சுதந்திரத்தையும் கெடுக்க வேண்டுமன்ற எண்ணமில்லை. இது போன்ற ஆசைகள் தோன்ற யாரை நிந்திப்பது.

Unknown said...

Prabu Rajadurai,

Many homosexuals have been arrested in India for homosexuality. For example, in New Delhi, police arrested 18 men in 1992 from a park on the suspicion that they were homosexuals (1).4 men were arrested in Lucknow in 2006 for this 'offense'.(2)

I don't know whether penetration by artificial means can be held against lesbians.But so far, as I know, all of those who were arrested for homosexuality were men.

1.http://www.scielo.br/scielo.php?script=sci_arttext&pid=S0034-89102006005000036&lng=en&nrm=iso&tlng=en

2.http://www.hinduonnet.com/2006/01/13/stories/2006011301731700.htm

ஸ்ரீ சரவணகுமார் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

உடனடியாக சட்ட சீர்திருத்தம் இந்தியாவில் வந்தாக வேண்டும்

இதெல்லாம் தனிமனித சுதந்திரம். இதில் தலையிட சட்டத்திற்கு எந்த உரிமையும் இல்லை

அதே சமயத்தில் நம் மக்களிடமும் விழிப்புணர்வு வர வேண்டும்

ஆணென்றும் பெண்ணென்றும் இறைவன் ஏன் படைத்தான் என்று பல பேர் தமிழ்மணத்திலேயே கூறியதுண்டு

கவிதா | Kavitha said...

இதற்கு முன் கேரளாவை சேர்ந்த இருவர் இப்படி வாழ்வதாக போட்டோவோடு வந்தது. இதே வயதுடையவர்கள் தான்...

என்னமோ..நடக்குது... வாழ்க்கை புரியனும். .நாட்கள் ஆகும் வருடங்கள் கூட ஆகலாம்....

கானா பிரபா said...

எங்கூர்ல (அதாங்க வாழ்வகம்)வருஷா வருஷம் ஊர்வலமே வைப்பாங்க,

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு.

Anonymous said...

///இதற்கு முன் கேரளாவை சேர்ந்த இருவர் இப்படி வாழ்வதாக போட்டோவோடு வந்தது. இதே வயதுடையவர்கள் தான்...

என்னமோ..நடக்குது... வாழ்க்கை புரியனும். .நாட்கள் ஆகும் வருடங்கள் கூட ஆகலாம்....///

இவங்க சொல்வது சரியில்லை...(பார்வைகள் மாறனும்)

க்கே / லெஸ்பியன் என்னும் ஓரினச்சேர்க்கைக்கான விருப்பம் / இந்த விடயம் ஹார்மோன்களில் ஏற்ப்படும் மாற்றம்...

அவர்களால் ஒரு ஆணுடன் திருமணத்தில் இணைந்த வாழ்க்கை நடத்தவியலாது...

இந்திய சமூக சூழலில் பெற்றோர் மற்றும் மற்றோர் வற்புறுத்தலினால் திருமணம் செய்த இது போன்ற பெண்களில் மணவாழ்க்கை சிலசமயம் கொஞ்சம் Sustain ஆகி பிறகு முறிந்த கதைகள் பலவுண்டு...சில பெண்கள் மிகுந்த சிரமத்துக்கிடையில் / மன ஈடுபாடில்லாமல் சமூகத்துக்கு பயந்து வாழ்ந்த காலம் சற்றே மாறி வருகிறது என்றே எண்ணவேண்டும்...

இது மாற்றம் வரும் நேரம் என்றே நினைக்கிறேன்...

வழக்கமாக நமது சமூகம் இந்த சோடிகளுக்கு தன்னால் ஆன இடையூறுகளை ஏற்படுத்தத்தான் செய்யும்...அதை எல்லாம் மிறி சாதிப்பார்களா என்று பார்க்க வேண்டும்...

அரைக்கிறுக்கன் கிறுக்கிய சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு புதிய சட்டங்களை உருவாக்க ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் விடுமா தெரியவில்லை....!!!

Sridhar V said...

செய்தியை விட அதற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் சுவாரசியமானதாக இருக்கிறது. :-))

//carnal intercourse against the order of nature என்றுதான் இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. இதற்குள்தான் ஒரினச் சேர்க்கையை கொண்டு வர வேண்டும்.

//
"penetration is sufficient to constitute the carnal intercourse" என்றும் விளக்கம் கூறுகிறது.

It requires atleast a minimum degree of penetration...
//

இது புது செய்தி. carnal intercourse-க்கு விளக்கம் சரி. ஆனால் 'against the nature' என்பது இன்னும் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. :-))

Thekkikattan|தெகா said...

இது ஹார்மோன்களின் மிருதங்க விளையாட்டு என்று ஒட்டு மொத்தமாக கூறிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், வாய்ப்பே இல்லை என்றும் கூறுவதற்குமில்லை. இருக்கிறது at certain extend.

இருந்தாலும் இயற்கையில் எந்த விலங்குகளிடத்தும் இது போன்ற Manipulated homosexuality trend homo spp.களிலேயே கிடையாது. நான் அறிந்த வரையிலும், இது ஒரு பொய்யான உடல் சேர்க்கை (Psuedo mating) என்றும் விளையாட்டுத்தனமான பழக்கமென்றுமே (Play Behavior) அறியப் படுகிறது. அதுவும் இயற்கை அமைப்பில், வனந்திரங்களில். எங்காவது இரண்டு வளர்ந்த ஆண் சிம்பன்சிகள் தனியாக வீடு கட்டி full fledged groupயை அமர்த்திக் கொண்டாதாகவோ, அல்லது பழக்க தோசமாக அவ்வாறு ஒரே ஆண் சிம்பன்சியுடன் மற்றொரு ஆண் சிம்ப்ஸ் உடல் சார்ந்த உறவு முறை வைத்திருந்தாக எந்த ஆராய்ச்சியும் எந்த வனங்களிலிருந்தும் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இருப்பினும், நாங்கள் கவனித்த வரையிலும் இளம் (juvenile and sub-adults) சிம்ப்ஸ்களிலிடயே fake ஏறல் இருப்பதை காண்டிருக்கிறோம். இதுவே சாதரணமாக நம்மை சுத்தியும் காணவேண்டுமானால் ஆட்டுக் குட்டிகளும் (ungulates), puppiesகளிலும் (Carnivores) அதே போன்று விளையாட்டுக்களில் ஈடுபடுவதுண்டு.

மேலும் ஊண் உண்ணிகளில் கண்டொமானால் இளம் குட்டிகள் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து அடித்துக் கொள்வது போலவும், பதுங்கியிருந்து கவ்விப் பிடித்துக் கொள்வது போலவும், விளையாட்டுக்களில் ஈடுபடும். இதுவனைத்தும் பிற்காலத்தில் தனிப்பட்ட முறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகளே (survival strategy). எனவே விலங்குலகின் பார்வையில் இதுவும் ஒரு "விளையாட்டுப் பழக்கமாக"வே (Play Behavior) அறிகிறோம்.

Behavioral Scienceல் இப்பொழுது எது போன்ற மாற்றங்களை கொண்டு ஜீன்களில் ஏற்படும் அடிப்படை கட்டமைப்பு தகராறில் இது போன்று ஓரின ஈர்ப்பு அதீதமாக ஒருவரின் தினசரி வாழ்க்கையில் நுழைந்து இது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறதோ...

இதுவன்றி, வளர்ந்த நாடுகளில் இப்பொழுது ஒரு வித குடும்ப, பொறுப்புகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டும் (societal responsibility), (இது என்னுடைய புரிதலே), தனக்கு முன்பே தனது உறவினர்களுக்கும், நண்ப-நண்பிகளுக்கு ஏற்பட்ட விவாகரத்து கசப்பு அனுபவங்களிலிருந்து தன்னை பாத்துகாத்துக் கொள்ளவும், இந்த ஹோமொ என்ற கேடயத்தை விரும்பியே கையிலெடுக்கிறார்களொ என்று எண்ணச் செய்கிறது.

நமது இந்தியச் சூழலில் மக்கட் நெருக்கத்தால் ஒரே அறையில் பல பேருடன் வாழ நேர்வது, அதன் மூலம் கிடைக்கும் அந்நோந்தியம் மற்றும் இதர காரணிகள் இது போன்ற உறவுகளுக்கு அடிகோணலாமோ...

பி.கு: இதில் சில கருத்துக்கள் என்னுடைய சொந்த புரிதல்களின் மூலமாக தருவிக்கப்பட்டது. மறு பரிசீலனைக்கு உட்பட்டதும் கூட.

Anonymous said...

பொண்ணும் பொண்ணும் திரும‌ண‌ம் செய்ய‌ட்டும். அது அவங்க விருப்பம்.ஆனா,
அப்புற‌ம் ஏன் ஆண் வேச‌த்தில‌ உடையணிந்து ........ ?
யாரைத் திருப்திப்ப‌டுத்த‌? புரியல‌ப்பா!! தெரிஞ்ச‌ சொல்லுங்க!!


புள்ளிராஜா

Santhosh said...

தெ.கா சொல்லி இருக்கும் கருத்துக்கள் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. இது மாதிரியான உறவுகள் பெரும்பாலும் ஒரு curiosity இல் துவங்கி தொடர்வது தான். சிலரது விஷயங்களில் இருவரும் ஒன்றாக வாழும் சமயங்களில் ஏற்படும் attraction கூட இது மாதிரியான உறவுகளுக்கு வழி வகுக்கின்றன. மேலும் இங்கு கூட Gay மக்கள் பெரும்வாரியாக தென்படுகிறார்கள் lesbians மிகவும் கம்மி ஏன் என்று தெரியவில்லை. நான் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் Gayக்கள் பெண்களிடம் உடல் உறவு கொள்வதை விரும்பமாட்டார்கள் ஆனால் lesbianகள் ஆண்களிடம் உடல் உறவு வைத்துக்கொள்வார்கள், சரியா என்று தெரியவில்லை.

Santhosh said...

//சந்தோஷ்..எதுக்கு இத்தன கவலை... சினிமா வசனம் தான் நியாபகம் வருது...உங்களுக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்க போறா... :-))
ரொம்ப வெசனப்படாதீக..//
:)) யாருன்னு கேட்டு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கு. இவளா அவளான்னு அலைய வேண்டியது இல்ல பாருங்க :)

Santhosh said...

//ஷாட் கட் பண்ணா சந்தோசோட சோடி ஒரு புல் வெளியிலேயோ, குளத்தாங்கரையிலேயோ பாட்டுப்பாடனுமே.//
விவா,
தனியா தானே பாடுது? வேற எதுனாச்சி சொல்லி நெஞ்சில குண்டு வெச்சிடாதலே..

G.Ragavan said...

// Anonymous said...
பொண்ணும் பொண்ணும் திரும‌ண‌ம் செய்ய‌ட்டும். அது அவங்க விருப்பம்.ஆனா,
அப்புற‌ம் ஏன் ஆண் வேச‌த்தில‌ உடையணிந்து ........ ?
யாரைத் திருப்திப்ப‌டுத்த‌? புரியல‌ப்பா!! தெரிஞ்ச‌ சொல்லுங்க!!


புள்ளிராஜா //

யோசிக்க வைக்கின்ற கேள்விதான். ஆனால் அது அவரைத் திருப்திப் படுத்திக் கொள்ளவே என்று நினைக்கிறேன். ஆண்கள் பெண்ணாக அறுவை சிகிச்சை செய்கிறார்களே...அது யாரைத் திருப்திப்படுத்த. நான் நினைக்கிறேன்...அந்தப் பெண் தன்னை ஆணாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று. ஆகையால்தான் அப்படியிருக்கும் என்று தோன்றுகிறது.

// செந்தழல் ரவி said...
க்கே / லெஸ்பியன் என்னும் ஓரினச்சேர்க்கைக்கான விருப்பம் / இந்த விடயம் ஹார்மோன்களில் ஏற்ப்படும் மாற்றம்... //

அப்படியானால் அது செய்ற்கையானதல்ல. அப்படித்தானே. ரவி, எனக்கு ஒரு ஐயம். ஒருவேளை இயற்கையே மக்கள்தொகையைக் குறைக்க இப்படியொரு உத்தியைச் செயல்படுத்துகிறதோ என்று!


// அரைக்கிறுக்கன் கிறுக்கிய சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு புதிய சட்டங்களை உருவாக்க ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் விடுமா தெரியவில்லை....!!! //

ரவியின் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.

// செல்வன்,

carnal intercourse against the order of nature என்றுதான் இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. இதற்குள்தான் ஒரினச் சேர்க்கையை கொண்டு வர வேண்டும்.

"penetration is sufficient to constitute the carnal intercourse" என்றும் விளக்கம் கூறுகிறது.

It requires atleast a minimum degree of penetration...

Can that happen in a lesbian relationship? //

உண்மைதான். இரண்டு பெண்கள் விஷயத்தில் நடவாது. ஆனால் இரண்டு ஆண்கள் விஷயத்தில் நடக்கலாம் அல்லவா. அப்படியிருக்கையில் ஒருவேளை இரண்டு ஆண்கள் இப்பிடி வாழ ஆசைப்பட்டால்? பெண்களுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆண்களுக்கு இல்லை. :)))))

மற்றொன்று. முன்பு கேரளா..இப்பொழுது பஞ்சாப். இரண்டிலும் பெண்கள்தான் முன்வந்து இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு ஆண்கள் இப்படி வந்து சொல்லவில்லை. ஆண்களை விட பெண்கள் துணிச்சல்காரர்களோ!

Anonymous said...

தெகா,

நல்லா இருக்கு உங்க யோசன. பாலியல் சிறுபான்மையினரா லெஸ்பியன், க்கே, ஹோமோ,பை - போன்றோரை சொல்றாங்க. இது தவிர, பீடோபிலியா என்னும் குழந்தைகளோடு உறவு கொள்வோர், பிணத்தோடு உறவு கொள்வோர், மிருகங்களோடு உறவு கொள்வோர் என்பவர் பற்றியெல்லாம் கேள்விப்பட முடிகிறது. மற்றவர்களைப் பாதிக்காத வரையில் அவரவருக்கான வாழ்க்கை முறை என்றால் அதில் மூன்றாமவருக்கு இடமிருப்பதாய் தெரியவில்லை. ஆனால் பீடோபிலியா போன்ற மனோபாவம் குழந்தைகளைப் பாதிப்பதால் கடுமையான தண்டனைக் குறியதாகும்.

இளங்கோவன்.

சீனு said...

அது ஏங்க எல்லா லெஸ்பியன் திருமணத்திலும் யாராவது ஒருவர் ஆண் உடை தரிக்கிறார்(ள்)?

//ஆனா,
அப்புற‌ம் ஏன் ஆண் வேச‌த்தில‌ உடையணிந்து ........ ?//
அட! இவர் கேட்டுட்டாரா?

பெரும்பாலும் இப்படி ஃகே மற்றும் லெஸ்பியனாக வாழ்ந்தவர்கள், பின்னாளில் (50+) ஆனும் பொழுது பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இது அவர்களை மனதளவில் பெருமளவு பாதிக்கப்படுவதாக சில வாரங்களுக்கு முன் குமுதம் எஸ்-ல் படித்த நியாபகம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...