.

Wednesday, June 20, 2007

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் காட்சி-`சிவாஜி' படத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

"சிவாஜி''யில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது போல் இடம் பெற்றுள்ள காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கறுப்பு பணத்தை முஸ்லிம்களிடம் கொடுத்து வெளிநாட்டில் அமெரிக்க டாலர்களாக மாற்றுகின்றனர். பிறகு அது வெள்ளைப் பணமாக தமிழ் நாட்டில் இருக்கும் சிவாஜி பவுண்டேஷனுக்கு அனுப்புகின்றனர். இந்த காட்சியில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர்களாக இஸ்லாமியர் களை காட்டியுள்ளனர்.

இந்த காட்சியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எதிர்த்துள்ளது. அதன் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக் கூறி இருப்பதாவது:- ரஜினி படங்களை லட்சக் கணக்கானோர் பார்க்கின்றனர். அவர் படத்தில் முஸ்லிம் கள் பற்றி அவதூறான காட்சி இடம் பெற்றதை தவிர்த்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் தீவிர வாதி என்ற பாத்திரத்துக்கு முஸ்லிம் போல் உடை அணிந்த வரை காட்டும் பழக்கம் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு இடங்களில் முஸ்லிம் தவறு செய்து இருக்கலாம். அதற்காக எல்லோரையும் அது போல் சித்தரிப்பதை ஏற்க முடியாது.

கறுப்பு பணத்தை மாற்றுபவ ராக "சிவாஜி''யில் முஸ் லிம்களை காட்டியுள்ளனர். படத்தை பார்ப்பவர்கள்அந்த சமுதாயத்தை பற்றி தவறாக நினைக்கத் தோன்றும்குறிப்பிட்ட காட்சிகள் இடம் பெறுவதற்கு டைரக்டர் ஷங்கர்தான் முதல் காரணம். ஆரம்பத்திலிருந்தே அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களைத்தான் சொல்லி வருகிறார். சிவாஜிக்கு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

2 comments:

Anonymous said...

though one side u all
cry ,and bark at the sun
superstar the movie has
made records and records
..keeping shouting like
frogs in wel.....thanks for
speaking more about our
boss than us....
rajini veriyan

Anonymous said...

என்னடா இன்னும் எந்த அரசியல்வாதியும் எதிர்ப்பாக வாயைத் திறக்கவில்லையே என்று பார்த்தேன். இந்திய சினிமாக்களில் முஸ்லிம்களை சாந்த சொரூபிகளாகவும், நட்பின் சின்னமாகவும் காண்பிக்கும் சட்டத்தை மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...