.

Saturday, July 7, 2007

மருத்துவ கல்லூரிகளில் 300 மாணவர்கள் சேர்க்கைக்கு தடை வராது: கருணாநிதி அறிவிப்பு

முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்த கேள்வி பதில் விவரம் வருமாறு:-

கேள்வி :-"கட்சி பலத்தை ஊரறியக் காட்டி முண்டா தட்டுவதற்காக ஊர்வலம், பேரணி என்று நடத்தி போக்கு வரத்தை மூச்சுத் திணற வைத்து, கட்சித் தொண்டர்களையும், கட்சிக்கே சம்பந்தமில்லாத பொது ஜனங்களையும் ஒரு சேர மண்டை காய வைக்கிற தலைவர்கள் இனியாவது யோசிக்கலாமே!''என்று சென் னையில் நடைபெற்ற மகளிர் பேரணி பற்றி பா. சீனி வாசன் "விகடன்'' இதழில் தலையங்கம் தீட்டியுள்ளாரே?


பதில்:-அறுபது ஆண்டுக் காலசுதந்திரத்தில் முதன் முதலாக ஒரு பெண்மணி "ஜனாதிபதி'' பதவிக்கு வரப் போவதை முன்னிட்டு, தமிழ் நாட்டுத் தாய்க்குலம் நடத்திய பேரணியைப் பற்றி விகடன் சீனு; இப்படி எழுதி யிருக்கிறார். இந்தப் பேரணி யாவது மாலை 4 மணிக்கு நடந்தது.

தி.மு.க. ஆட்சியில் உலகத் தமிழ் மாநாட்டை முதன் முதலாக அண்ணா நடத்திய போது இந்த சீனுவின் பாட்டனார் எஸ்.எஸ். வாசன் முன் நின்று, பகல் 12 மணிக்கு அவ்வளவு பெரிய ஊர்வ லத்தை ஆரம்பித்து ஒத்திகை பார்த்து நடத்தினாரே; அப் போது லட்சக்கணக்கான மக்களின் மண்டைகளையும் வெயிலில் காய வைக்கும் அளவிற்கு -நமது பண்டையப் பெருமைகளைச் சொல்லும் பவனி நடத்தவில்லையாப இப்போதாவது மாலை வெயில்; மனிதருக்கு மருந்து போன்றது!

தம்பி சீனு; விநாயக சதுர்த் தியன்று சென்னை வீதிகளில் செல்லும் ஊர்வலங்களைப் பார்த்ததில்லை போலும்! தற்போது நடைபெற்ற பவனி கூட, சாலையில் ஒரு பக்கத் தில் வழி விட்டு அதுவும் மிகச் சிறிய தூரம் செல்வதற்கு மட்டுமே நடத்தப்பட்ட ஒன்றா கும். அதுவும் மாலை 5 மணி அளவில் ஆரம்பித்து 7.15 மணி அளவில் முடிந்து விட்டது. அதற்காக அந்த வார இதழில் முதல் பக்கத்தில் "வெயிலோடு போராடி, வியர்வை யில் நீராடி'' என்றெல் லாம் தலைப்பிட்டு அந்தப் பதிப்பாளர் இந்த எதிர்ப்பினை முழக்கியிருக்கிறார்.


கே:-ஜெயலலிதா நேற் றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் அலட்சிய போக்கினால் தமிழ் நாட்டில் இந்த ஆண்டு மட் டும் 300 மருத்துவர்கள் உருவாவது தடை பட்டு விட்டதாகக் கூறி யிருக்கிறாரே?


ப:-ஜெயலலிதாவின் நேற்றைய அறிக்கைக்கு, நேற்றைய தினமே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் விரிவாக பதில் அளித்துள்ளார். தமிழ் நாட் டில் மூன்று அரசு மருத் துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக 300 மாணவர் களைச் சேர்க்க மத்திய அரசு நிறுவனம் தடை செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வந்தவுடன், அந்தத் துறையின் அமைச்சரை நான் அழைத்து உடனடியாக டெல்லி சென்று அங்கே அந்தத் துறையின் அமைச்சர் அன்புமணி ராமதாசிடம் விளக்கங்களை அளித்து மீண்டும் அதற் கான அனுமதியினை பெற்று வருமாறு தெரிவிக் கப்பட் டுள்ளது. அவரும் உடனடியாக டெல்லி சென்று, அமைச்சரிடம் விளக்கங்களை அளித்து சாதகமான பதிலைப் பெற்று வந்துள்ளார். எனவே இந்த ஆண்டு 300 மாணவர்களின் சேர்க்கை தடை பட்டு விடும் என்ற ஜெயலலிதாவின் கனவு பலிக்காது.

அது மாத்திரமல்ல, இப்படிப் பட்ட நேர்வுகள் கடந்த கால ஜெயலலிதா ஆட்சியிலும் எந்தெந்த ஆண்டுகளில் இவ் வாறு மத்திய அரசு நிறு வனத்திடமிருந்து அனுமதி மறுக்கப் பட்டன என்பதையும் ஆதாரத்தோடு ஏடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சிக் காலத்திலே நடந் ததை அப்படியே மறந்து விட்டு, இந்த ஆட்சியில் தான் இப்படி நடைபெற்ற விட்டது போல கருதிக் கொண்டு, ஜெயலலிதா அவசர அவசரமாக அறிக்கை விடுத்துள்ளார்.


கே:-கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழையி னால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இந்த அணை யிலிருந்து தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைத்து கர்நாடக துணை முதல்வர் எத்திïரப்பா உத்தரவிட்டுள்ளதாக ஏடு களில் செய்தி வந்துள்ளதே?


ப :-அந்தச் செய்தி உண்மை யானதாக இருக்கக் கூடாது.

அப்படி உண்மையாக இருக்குமேயானால் ஒரு மாநிலத்தின் துணை முதல் வர் அரசியல் சட்டத்தின்மீது கொண்டிருக்கும் மதிப்பை யும் கூட்டாட்சி தத்துவத் தில் அவருக்குள்ள நம்பிக்கை யையும் வெளிப் படுத்துவதாக இருக்காது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு குழி தோண்டும் செயலாகவே ஆகிவிடும். இப்போதே மேட்டூர் அணை இன்னும் திறக்கப் படாத நிலைமை உள்ளது. எனவே இதிலே மத் திய அரசும், பிரதமரும் உடன டியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்.


கே:-கூட்டுறவு தேர்தலில் மாவட்டங்களில் ஆங்காங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளனவே?


ப:-கூட்டுறவு தேர்தல்கள் அரசியல் அடிப்படையில் நடைபெறக் கூடாது என்ற எண்ணம் கொண்டதும் அதை செயல்படுத்துவதும் தான் அரசின் நடைமுறையாகும். இந்த அரசு. எனவே தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை யில் கழகத்தினர் ஜனநாயக மரபுகளை கடைப்பிடிக்க வேண்டு மென்றும், ஆங்காங்கு தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி, இரு தரப்பி னருக்கும் உள்ள வாய்ப் புகளின் அடிப்படையில் போட்டியிடுவது நல்லது என்றும் அதிலே ஏதாவது பிரச் சினைகள் இருக்கு மேயானால் அந்தந்த கட்சி களின் தலைமையோடு தொடர்பு கொண்டு பேசித் தீர்த் துக் கொள்ள முன் வர வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஏனென்றால் இந்தக் கூட்டுறவுத் தேர்தலைப் பயன் படுத்தி தோழமைக் கட்சிகள் இடையே பிரச்சினைகள் வராதா என்று எதிர்க்கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


கே:-தமிழகத்திலே மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப் பட்டிருப்பது பற்றி?


ப :- வரவேற்கப்படவேண் டிய ஒன்றாகும். வழக்குகள் தேங்கு வதைத் தவிர்ப்பதற்காக சென்னை உட்பட ஆறு மாநகராட்சிகளில் பதினோரு மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குஜ ராத் மாநிலத்திற்கு அடுத்த படியாக தமிழகத்திலே தான் இத்தகைய மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப்படு கின்றன.


கே:-தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்றும், பொன்னான எதிர் காலம் காத்துக் கொண்டி ருக்கிறது என்றும் ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பது பற்றி?


ப:-ஓடிக் கொண்டிருக்கும் கட்சித் தொண்டர்களை பிடித்து நிறுத்துவதற்கு வேறு வழி?


கே:-ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் குடியரசு தலைவர் பொறுப் புக்கு போட்டியிடும் பிரதீபா பட்டீல் குறித்து தொடர்ந்து எதிர் அணியினர் குற்றச் சாட்டுகளை சுமத்திக் கொண் டிருக்கிறார்களே?


ப:-உச்ச நீதி மன்றத்திலேயே வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் பிரதீபா பட் டில் மீது ஊழல் புகார்கள் உள்ளன என்றும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய தேர் தல் ஆணையத்திற்கு உத்தர விட வேண்டுமென்றும் கோரி வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பாலசுப்ர மணியம், தருண் சாட்டர்ஜி ஆகியோர் முன்பு விசார ணைக்கு வந்து, பிரதீபா அம்மையார் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகும் எதிர் தரப்பினர் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருப்பதற்குக்கார ணம், அரசியல்தான்.


கே:-சேலத்தில் புதிதாக ரெயில்வே கோட்டம் அமைப் பது பற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளர் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருகிறாரேப சேலத்தில் கோட்டம் அமைப்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை என்றும் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறாரே?


ப:-இதைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு திட்டவட்டமாக பதில் அளித் திருக்கிறார். அந்தப் பதிலில் "சேலம் கோட்டம் ஏற் கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று, இதற்கான எல்லைகளும் தீர் மானிக்கப்பட்டு விட்டன.

ரெயில்வே வாரியத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் ஒருவர், ரெயில்வே வாரிய முடிவுகள் குறித்து எதுவும் கூற முடியாது. அதுவும் வரும் 18ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள அவர், ஏன் இப்படி முரண்பாடாக பேசுகிறார் எனத் தெரியவில்லை. சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதர வளித்துள்ளது. இது தொடர் பாக தமிழக அரசு கேரள முதல்வருடன் பேச வேண் டிய அவசியமில்லை. திட்ட மிட்டபடி ஆகஸ்ட் மாதம் துவக்க விழா நடைபெறும்'' என்று தெரிவித்திருக்கிறார். எனவே சேலம் கோட்டம் அமைவது பற்றி நாம் எந்த ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை.

மாலைமலர்

1 comment:

Boston Bala said...

3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி


தமிழகத்தில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் வேலூர், கன்னியாகுமரி மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் தடை விதித்திருந்தது.

தற்போது இந்த மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் 300 மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் தடையை நீக்கி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிறப்பித்திருந்தார். இதையடுத்து தடை நீக்கப்படுவதாக எம்.சி.ஐ. தெரிவித்துள்ள செய்தி, பெங்களூரு பயணமாகியுள்ள முதல்வர் கருணாநிதியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-o❢o-

b r e a k i n g   n e w s...