.

Saturday, July 7, 2007

முதல்வர் கருணாநிதி மூன்று நாள் பயணமாக பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் கருணாநிதி மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் தனது மகள் செல்வி வீட்டில் தங்கியிருப்பார். ஓய்வெடுப்பதற்காக மகள் வீட்டுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகரில் டாஃபே நிறுவன விழாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் பங்கேற்றார். அங்கிருந்து திரும்புகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். மாலை 6.30 மணிக்கு அலையன்ஸ் ஏர் விமானம் மூலம் அவர் பெங்களூருக்குப் பயணமானார். முதல்வருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், முதல்வரின் மருத்துவர் கோபால், 2 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு தனிச் செயலர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர். அதே விமானத்தில் பொதுப்பணி மற்றம் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனும் தனி டிக்கெட் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, முதல்வர் சென்னை திரும்பக் கூடும். கடந்த ஆண்டு முதல்வராக பதவியேற்ற பிறகு ஒருவார காலம் பெங்களூர் சென்று ஓய்வெடுத்துத் திரும்பினார். அதற்குப் பிறகு தற்போது அவர் பெங்களூரு சென்றுள்ளார். முதல்வரின் தனிப்பட்ட பயணம் என்பதால், பயண விவரம் மற்றும் அவரது சந்திப்புகள் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...