இன்று 7.7.2007 தினத்தன்று 7 அதிசயங்கள் பற்றிய தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
உலகின் 7 அதிசயங்களாக எகிப்து நாட்டை சேர்ந்த பிரமீடு உள்ளிட்ட 7 இடங்கள் கிரேக்க அறிஞரால் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இவற்றில் 6 இடங்கள் இப்போது இல்லை. இந்நிலையில் புதிய கட்டடக்கலை வல்லுனர் குழு உலகின் 7 புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து உலகெங்கிலும் உள்ள மக்கள், மொபைல்போன் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆக்ராவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, ஈபிள் டவர் உள்ளிட்ட 21 சின்னங்கள் இப்போதைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் 7 அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 7.7.2007 அன்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. லிஸ்பன் நகரில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. உலகின் 7 அதிசயங்களை அறிவதற்காக உலகமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இதில் இடம்பெறவேண்டும் என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பு. இதற்காக லட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தில் வாக்களித்தது நினைவிருக்கலாம்.
Saturday, July 7, 2007
உலகின் 7 புதிய அதிசயங்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
Labels:
வித்தியாசமானவை
Posted by
Adirai Media
at
10:55 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment