.

Saturday, July 7, 2007

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய கணக்கெடுப்பின்படி குறைவு

இந்தியாவில் எய்ட்ஸ் அல்லது ஹெச் ஐ வியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையினை விட பாதியாக இருக்கிறது என இந்தியா கூறியுள்ளது. ஐ.நா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், இருபது லட்சம் முதல் 31 லட்சம் பேர் வரையில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக ஐம்பது லட்சம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. திறம்பட்ட வகையில் தகவல் திரட்டப்பட்டதால் இந்த வித்தியாசம் அறியப்பட்டிருப்பதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டபவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பீட்டு வருவதாக இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. புதிய கணக்கெடுப்பின்படி, தென்னாப்பரிக்கா, நைஜிரியாவிற்கு அடுத்தப்படியாக எய்ட்ஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது.

- BBC Tamil

VOA News - India's AIDS Cases Less Than Half of Previous Estimates

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...