.

Friday, July 20, 2007

தமிழக அரசு தொடங்கும் புதிய `கேபிள் டி.வி.'- கருணாநிதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் கேபிள் டி.வி. தொழிலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. இதில் சிலர் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். எனவே அரசே கேபிள் டி.வி.யை ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தியதால் கேபிள் டி.வி. தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்த தொழில் நுட்பத் துறை அதிகாரிகளை முதல்- அமைச்சர் கருணாநிதி அனுப்பி வைத்தார்.

அப்போது டாக்டர்ராமதாஸ் "தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. தொழிலை ஒழுங்கு படுத்த வேண்டுமானால் எல்லா கேபிள் டி.வி.க்களையும் அரசே கையகப்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்'' என்று ஆலோசனை தெரிவித்தார்.

தனியார் கேபிள் டி.வி.க் களை கையகப்படுத்தும் பட்சத்தில் அதில்சட்ட சிக்கல்கள் எழலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

புதிய கேபிள் டி.வி.யை தமிழக அரசு சொந்தமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கேபிள் டி.வி.யையும் அரசு கையகப்படுத்த முடியாது. அது தேவை இல்லாத சட்ட பிரச்சினைகளை உருவாக் கலாம். எனவே தான் அரசே சொந்தமாக கேபிள் டி.வி.தொழிலில் ஈடுபடுகிறது.

'டாஸ்மாக்' போல கேபிள் டி.வி.யும் தமிழக அரசுக்கு அதிக வருமானத்தை பெற்றுத் தரும். முதல் கட்டமாக கேபிள் டி.வி. தொழில் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வருமானம் அரசின் மேம்பாட்டு பணிகளுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த திட்டம் தற்போது முதல் கட்ட அளவில் தான் உள்ளது.

புதிய கேபிள் டி.வி.யை அமல்படுத்த கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை. அரசின் கேபிள் டி.வி.யை சிறப்பாக கூடுதல் லாபத்துடன் இயங்க வைக்கும் வழிகள் குறித்து தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுடன் நாங்கள் கருத்து கேட்டு இருக்கிறோம்.

நிபுணர்களின் முழுமை யான ஆலோசனை கிடைத்த தும் அரசின் புதிய கேபிள் டி.வி. நடைமுறைக்கு வரும் முதலிலேயே தமிழ்நாடு முழுவதிலும் அரசின் கேபிள் டி.வி.யை கொண்டு வர இயலாது. படிப்படியாக அரசின் கேபிள் டி.வி. தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

முந்தைய சற்றுமுன்...: டிடீஎச் கட்டணங்களை ட்ராய் கட்டுப்படுத்தாது

மாலைமலர்

The Hindu : Front Page : Government-run cable TV service coming

2 comments:

சிவபாலன் said...

It seems they need huge capital?!

ஜீவி said...

அரசு முன்பு இலவசமாக டி.வி. கொடுத்தோருக்கு, இப்பொழுது புதிய
கேபிள் கனெக்க்ஷனையும் இலவசமாகவே கொடுப்பதே நியாயம்.
எதெற்கும், இது விஷயத்தில் மருத்துவர் ராமதாஸைக் கலந்துகொண்டு முடிவெடுப்பதே நலம். இதனால், அரசுக்கு ஏற்படும்
இழப்பை, மொத்த லாபத்தில் ஈடுகட்டிக்கொள்ளலாம்.
நாமும், மிகச்சுலபமாக, ஏழையின்
சிரிப்பில் இறைவனை முன்பு
கண்டது போல் அடிக்கடிக் கண்டு
கொண்டிருக்கலாம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...