.

Sunday, July 1, 2007

"சிவாஜி" படத்தில் நடித்த துணை நடிகர் கொலை

போரூர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தவர் ஜீவா (35) இவர் `சிவாஜி', "வசந்தம் வந்தாச்சு" உள்பட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

அவர் தனது நண்பர் செல்வராஜுடன் வட பழனி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் கும்பல் இருவரையும் குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் வைத்து கடத்தி சென்றது. சிறிது தூரம் சென்றதும் செல்வராஜை அந்த கும்பல் அடித்து கீழே தள்ளியது. ஜீவாவுடன் ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

மறுநாள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் "ஜீவாவை முடித்து விட்டோம்'' என்றும் வெளியில் சொன்னால் உன்னையும் முடித்து விடு வோம் என்றும் செல்வராஜை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போய் செல்வராஜ் இது பற்றி யாரிடமும் கூறாமல் இருந்தார். நேற்று மேற்கண்ட விபரத்தை புகாராக எழுதி விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் கொடுத்தார்.

அவரோ கடத்தல் என்பதெல்லாம் நாடகமாக இருக்கும்'' என கூறி ஜீவா காணா மல் போய் விட்டார் என வழக்குப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே கடந்த 27-ந் தேதி ஜீவா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு நந்தம்பாக்கம் அருகே மணப்பாக்கம் ராணுவ சுடுகாட் டில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றி போரூர் ராமச்சந்திரா ஆஸ் பத்திரிக்கு அனுப்பிய நந் தம்பாக்கம் போலீசார் ஜீவா மர்மமான முறையில் மரணமடைந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கூட விசாரிக்க மனமில்லாமல் ஜீவா வழக்கை கிடப்பில் போட்டனர். அக்கம் பக்கத்து காவல் நிலையத்துக்கு கூட இப்படி ஒரு ஆண் நபர் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார் என அந்த தகவலை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜீவாவின் நண்பர் செல்வராஜுக்கு ஜீவா மணபாக்கம் சுடுகாட்டில் கொலை செய்து வீசப்பட்டுள்ள தகவல் கிடைத்தது. இவராக போய் நந்தம் பாக்கத்தில் விசாரித்த பின்னர் தான் சுடுகாட்டில் பிண மாக கிடந்தவர் ஜீவா என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசுக்கு தெரிய வந்தது. தாமதமாக விழித்துக் கொண்ட நந்தம்பாக்கம் போலீசார் இது பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர்.கொலை தொடர்பாக நந்தம்பாக்கம் போலீஸ்காரர் ஒருவர் கூறும் போது:-

ஜீவா கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்தால் குற்றவாளியை பிடிக்க வேண்டும், கோர்ட்டு வழக்கு என அலைய வேண்டும் அதனால் அனாதை பிணம் என்று கணக்கு காட்டி எரித்து விட முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரத்தில் செல்வராஜ் தந்த தகவலால் ஜீவா வழக்கை விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் கவனமில்லாமல் உள்ளனர் என்றார்.

நன்றி: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...