.

Tuesday, July 3, 2007

"ஷெகாவத்தும் உத்தமரில்லை" - காங்கிரஸ்

நாட்டின் தலைமைப்பதவியான குடியரசுத்தலைவர் பொறுப்புக்கு தேர்தல் களை கட்டி வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் பிரதீபா பாட்டில் மீது பலப்பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அவர் சொத்து கணக்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதாவினர் மனு கொடுத்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக, நீ மட்டும் யோக்கியமா தோரணையில் எதிர்கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளரும், தற்போதைய துணை குடியரசுத்தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத் மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

இதற்கான ஆதாரங்களையும் காங்கிரஸ் திரட்டி வருகிறது.

1976-ம் ஆண்டு அத்தியாவசிய பொருள் பதுக்கல் சட்டத்தின் கீழ் செகாவத்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக் கப்பட்டது. அந்த வழக்கை தோண்டி எடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகளை கூற திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அப்போதைய வழக்கின் மு.கு.ப (F I R ) ஐத் தேடி எடுக்கும் முயற்சியில் காங்கிரஸார் இறங்கி உள்ளனர்.

செகாவத் ராஜஸ்தான் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது மகன், மருமகன் மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு செல்ல விடாமல் தடுத்ததாகவும், மருமகன் தொடர்பான வழக்கில் சட்டசபையில் பொய் சொன்னதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த செய்திகளையும் வெளியே கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

இது பற்றி பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறும் போது "காங்கிரசின் எந்த முயற்சிக்கும் பலன் இருக்கப் போவதில்லை'' என்றார்.

1 comment:

Anonymous said...

எந்த அரசியல்வாதியும் உத்தமராக இருக்க வாய்ப்பில்லை.

எந்த 'வணிகப்புள்ளியும்' தகிடுதத்தம் செய்யாதிருக்க முடிந்ததில்லை.

அப்துல் கலாம்கள் தான் இலாயக்கு.

அவர்களும் மறுத்தால்... எங்காவது கடைக்கோடி கிராமத்தில் யாராவது கருமமே கண்ணாக வயலில் உழுதுக்கொண்டிருப்பவரை பிடித்து வந்து மூணு மாச சட்ட கோர்ஸ் படிக்கவெச்சு நமக்கு ஜனாதிபதியாக்கிகலாம்.

என்ன.. நாஞ்சொல்றது.!

-o❢o-

b r e a k i n g   n e w s...