.

Tuesday, August 21, 2007

செப்-1 முதல் புதிய செயற்கைக்கோள் இன்சாட்-4 சிஆர்.

அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான "இன்சாட்-4 சிஆர்' செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி மாலையில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜூலையில் "ஜிஎஸ்எல்வி-எப்02' ஏவு வாகனம் (ராக்கெட்) மூலம் "இன்சாட்-4சி' செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ஆனால், அது வெற்றிகரமாக விண்ணுக்குச் செல்லவில்லை.

எனவே, இப்போது இன்சாட்-4 சிஆர் செயற்கைக்கோளைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "வீட்டுக்கே நேரடி ஒளிபரப்பு'க்குப் பயன்படக்கூடிய மற்றும் விடியோ படத் தொகுப்புகள், டிஜிட்டல் தகவல்களை அனுப்ப உதவும் அதிநவீன உயர்திறன் கொண்ட 12 கியூ-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் இச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள்.

"கடந்த முறை நமது முயற்சி தோல்வி அடைந்ததால், இப்போது, அதை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

தினமணியிலிருந்து..

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...